Gold Rate Today: ஓவர் நைட்டில் அமெரிக்கா எடுத்த முடிவு.. புதிய உச்சத்திற்கு பறந்த வெள்ளி! தங்கமும் எகிறியது
சென்னை: தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிய குழப்பம் இல்லாமல் தங்கத்தை வாங்கி வந்தனர். இதற்கிடையே அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதைப் பொறுத்தே தங்கம் விலை இனி இருக்கும். இன்றைய தினம் இந்தியாவில் தங்கம், வெள்ளி என இரண்டுமே உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே குழப்பத்தில் இருக்கிறது. ஒரு சில நாட்கள் தங்கம் விலை ஏறினால், அடுத்த சில நாட்கள் இறங்குவது என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் இந்தாண்டு தொடக்கத்தை போலத் தங்கம் விலை உயரவில்லை. இது ஒரு வகையில் பொதுமக்களுக்கு நல்ல ஒரு செய்தியாகவே இருக்கிறது.

தங்கம்
தங்கம் விலை என்பது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்படும் ஒன்றாகும். எனவே, சர்வதேச அளவில் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிக்கும். நேற்றிரவு அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. நமது ஊரில் ரிசர்வ் வங்கி எப்படி ரெப்போ வட்டி விகிதத்தை வெளியிடுகிறதோ.. அதேபோல அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
அமெரிக்கச் சந்தை
நேற்றைய தினம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது. பொதுவாகவே அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை உயரவே செய்யும். அதேநேரம் பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவுல் நேற்று சொன்ன கருத்துகளும் முக்கியம். வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் கூட அவர் பாசிட்டிவான கருத்துகளைச் சொல்லவில்லை. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் மிகக் குறைவாகவே உயர்ந்தது. அதுவே இன்று இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் தங்கம் விலை உயர்ந்தது.. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 உயர்ந்து. ரூ.96,240க்கு விற்பனை செய்யப்பட்டது.. அதாவது ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து. ரூ.12,030க்கு விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்க பெடரல் வங்கி மிக முக்கியமான முடிவை எடுத்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை அதைப் பொறுத்தே இருக்கும்.
இன்று தங்கம் விலை
இன்றைய தினம் சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.160உயர்ந்து, ரூ.96,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து, ரூ. 12,050க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, ரூ.209க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025- ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840
-
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications