Gold Rate Today: ஏமாற்றத்தில் நகை பிரியர்கள்! வாரத்தின் முதல் நாளே ட்விஸ்ட் கொடுத்த தங்கம்.. இன்று விலை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மாதம் பெரியளவில் ஏற்றம் இல்லாமல் இருந்த தங்கம் விலை இப்போது மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இப்போது சர்வதேச அளவில் பல்வேறு சூழல்களும் மாறியுள்ள நிலையில், தங்கம் விலை வரும் நாட்களில் உயரவே வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, தங்கம் விலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தங்கம் விலை பல மாதங்களாக கேப் விடாமல் உயர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த நவம்பர் மாதம் சட்டென பிரேக் அடித்தது போலத் தங்கம் விலை நின்றுவிட்டது. தங்கம் விலையில் பெரியளவில் உயர்வு இல்லாமலேயே இருந்தது. சொல்லப்போனால் கடந்த மாதம் சில நாட்கள் தங்கம் விலை கணிசமாகவே குறைந்திருந்தது.

Gold Price Gold

தங்கம்

இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக நிலைமை மாற ஆரம்பித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இதற்கிடையே சர்வதேச அளவிலும் பல்வேறு சூழல்கள் மாறிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்கப் பொருளாதார டேட்டாவின்படி, செப்டம்பரில் தனிநபர் நுகர்வு செலவு குறியீடு பெரியளவில் உயரவில்லை. அதேபோல கடந்த மாதம் தனியார்த் துறை வேலைவாய்ப்பும் கூட 2.5 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவைப் பதிவு செய்தது.

இதனால் அங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பெடல் வங்கி வரும் புதன்கிழமை இரவு தனது வட்டி விகிதம் குறித்த முடிவை அறிவிக்கவுள்ளது. அதைப் பொறுத்தே தங்கம் விலையில் வரும் நாட்களில் மாற்றம் இருக்கும் இப்போது பெரும்பாலான வல்லுநர்கள் அமெரிக்க பெடரல் வங்கி, தனது வட்டியைக் குறைக்கும் எனச் சொல்கிறார்கள். அப்படி வட்டி குறைந்தால் தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.

வல்லுநர் சொல்வது என்ன

இது தொடர்பாக டிடி செக்யூரிட்டிஸின் உலகளாவிய கமாடிட்டி தலைவர் பார்ட் மெலக் கூறுகையில், "அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைக்கும் என்றே முதலீட்டாளர்கள் பலரும் நம்புகிறார்கள். அப்படி வட்டி குறைக்கப்படும்போது டாலர் மதிப்பு சரியும், இதனால் தங்கம் விலை உயரும்" என்றார். தற்போது கிட்டத்தட்ட 4ல் 3 பங்கு வல்லுநர்கள் வட்டி குறைப்பு சாத்தியம் என்றே கருதுகிறார்கள். இதனால் தங்கம் விலை வரும் நாட்களில் உயரவே வாய்ப்பு இருக்கிறது.

இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கி புதன்கிழமையே வட்டியைக் குறைக்கும் என்பதாலும் இந்திய ரூபாய் மதிப்பு சற்றே மேம்பட்டு இருப்பதாலும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது நடக்கவில்லை.

தங்கம் விலை

நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,040க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்கெட் இல்லை. இன்றைய தினமும் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. நேற்றைய போலவே ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.96,320க்கும் ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.198க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160

03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480

02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580

30.11.2025- ஒரு சவரன் ரூ.95,840

29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+