Gold Rate Today: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. ரேட்டில் மிக பெரிய மாற்றம்.. நகைப் பிரியர்கள் குஷியோ குஷி
சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதம் குறித்து மிக முக்கியமான முடிவை எடுக்கவுள்ள நிலையில், தங்கம் விலை அதன் பிறகே எந்த டிரெண்டில் செல்லும் என்பது தெரிய வரும். இதற்கிடையே இன்றைய தினம் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இந்தாண்டு மட்டும் எந்தளவுக்கு வேகமாக அதிகரித்தது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சம் தொட்டு வந்தது. இதற்கு டிரம்ப் தான் பிரதானக் காரணம். டிரம்ப் எடுக்கும் முடிவுகளாலேயே தங்கம் விலை தொடர்ச்சியா உச்சம் தொட்டு வந்தது.

தங்கம் விலை
முதல் 10 மாதங்கள் முழுக்கவே தங்கம் விலை இப்படியே உயர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் தங்கம் விலை கடந்த மாதம் சற்று நிதானமாக நின்றது. பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருந்தது. இந்த மாதமும் கூட இதுவரை அதே டிரெண்ட் தான் இருக்கிறது. இதற்குப் பிரதானக் காரணமே அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தான்.
அமெரிக்க பெடரல் வங்கி
நமது ரிசர்வ் வங்கி எப்படிக் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை கூடி ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்வார்களோ.. அதேபோலத் தான் அமெரிக்க பெடரல் வங்கியும் தங்கள் வட்டி விகிதத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கும். இந்த வட்டி விகிதத்தை முடிவு செய்யும் கூட்டம் அமெரிக்காவில் இன்றும் நாளையும் நடக்கிறது. நாளை தான் வட்டி விகிதம் குறித்த முடிவு அறிவிக்கப்படும். அதன் பிறகே தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். இதன் காரணமாகவே தங்கம் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது.
தங்கம் விலையைப் பொறுத்தவரை கடைசியாகச் சனிக்கிழமை அதன் விலை உயர்ந்தது. அன்றைய தினம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த இரு நாட்களாகவே தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
இன்றைய தங்கம்
இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் தங்கம் விலையில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்தது.. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து, ரூ.12,000க்கு விற்பனையாகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.199க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1.9 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இப்படி தடாலடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025- ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: உச்சானிக் கொம்பில் இருந்து விழுந்த தங்கம்.. பணத்தை ரெடி பண்ணுங்க.. என்ட்ரி பாயின்ட் வருது -
தங்க விலை 16 வருடத்தில் மிக பெரிய சரிவு! அடுத்து என்ன நடக்கும்? முதலீட்டாளர்களுக்கு மேஜர் எச்சரிக்கை -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா..? நிபுணர்கள் அடித்து சொல்லும் முக்கிய விஷயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications