Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. தடாலடியாக சரிந்தது! பொதுமக்கள் ஹேப்பி! வெள்ளி விலை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரமாகவே எந்தவொரு ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் இருக்கிறது. ஒரு நாள் ஏறினால் மறுநாள் குறைவது என்றே மாறி மாறி இருந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சரிந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து, சவரன் ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்தாண்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடனேயே பறக்கத் தொடங்கிய தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குப் புதிய உச்சத்திற்குப் போனது. வெறும் சில மாதங்களில் தங்கம் விலை பல ஆயிரம் வரை கூட உயர்ந்தது. கடந்த ஒரே ஆண்டில் இந்தியாவில் தங்கம் விலை சுமார் 70%க்கு மேல் உயர்ந்து இருந்தது.

Gold Rate Today in Chennai 22 carat Gold price and silver price Today February 20

தங்கம் விலை

இந்தாண்டும் கூட தங்கம் விலையில் அதே டிரெண்ட் தான இருந்தது. ஜனவரி மாதம் முடிவதற்குள்ளே 10%க்கு மேல் உயர்ந்தது. அதன் பிறகே தங்கம் விலையில் பிரேக் போட்டார்கள். புவிசார் அரசியல், அமெரிக்காவின் அடுத்த பெட் வங்கி தலைவராக கெவின் வார்ஷ் பெயர் முன்மொழியப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிவைச் சந்தித்தது.

இப்போது சில வாரங்களாகவே தங்கம் விலையில் எந்தவொரு ஏற்றமும் இறக்கமும் இல்லாமலேயே இருக்கிறது. ஓரிரு நாட்கள் தங்கம் விலை ஏறினாலும் உடனே இறங்கிவிடுகிறது. அதேநேரம் இரண்டு நாட்கள் ஏறினால், அதைச் சேர்த்து வைத்து ஒரே நாளில் ஏறிவிடுகிறது. இப்படித் தங்கம் விலை ஏற்ற இறக்கம் சேர்ந்தே மாறி மாறி இருந்து வருகிறது.

காரணம்

இதற்குச் சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில் புவிசார் அரசியல் பதற்றங்கள் குறைந்துள்ளன. அமெரிக்கா ஈரான் இடையே போர் வெடிக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. அது குறித்த தகவல்கள் பாசிட்டிவாகவே இருக்கிறது. அதேபோல ஜனவரி மாதம் நடந்த அமெரிக்க பெட் மீட்டிங் குறித்த ரிப்போர்ட் வெளியானது. அதில் சில உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் காரணமாகக் காட்டி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அப்படி அடுத்த மீட்டிங்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கம் விலை சரியலாம்.

இன்றைய விலை

இதற்கிடையே இந்தியச் சந்தையிலும் இவை எதிரொலித்து உள்ளன. சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை சரிந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து, சவரன் ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றிக் கிராமுக்கு ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை நிலவரம்

19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 (இன்று)

18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840 (நேற்று)

17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560

16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520

15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200

12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800

11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320

10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640

09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200

08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+