Gold Rate Today: புதிய ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை.. இன்று விலை என்ன தெரியுமா! நல்ல செய்தி தான்
சென்னை: தங்கம் விலை கடந்த வாரம் சட்டென உயர்ந்த நிலையில், அதன் பிறகே நிலையாக இருந்து வருகிறது. நேற்றைய தினம் லேசாக தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை லேசாக குறைந்தது. இப்போது இந்திய சந்தையிலும் கூட அதுவே எதிரொலித்துள்ளது. இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.1,19,200க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு, பிப்ரவரி மாதம் முழுக்கவே நிலையாகவே இருந்தது. இதனால் பொதுமக்களும் சரி, வணிகர்களும் சரி மகிழ்ச்சி அடைந்தனர். கடைக்குப் போனால் பில் போடுவதற்குள் விலை ஏறிவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் பொதுமக்கள் இருந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் தங்கம் விலை சட்டென கிராமுக்கு ரூ.400 வரை அதிகரித்தது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்
இதற்குச் சில பிரதானக் காரணங்கள் உள்ளன. முதலில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் விதித்த வரியைச் செல்லாது என அறிவித்தவுடனேயே, டிரம்ப் உலக நாடுகள் மீது புதிய வரிகளை அறிவித்தார். உலகில் அனைத்து நாடுகள் மீதும் 10% வரி விதிக்கப்படும் என்றும் இது அடுத்த 150 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனவும் அறிவித்தார். இது உடனடியாக மறுநாளே 15%ஆக உயர்த்தப்பட்டது.
போர் பதற்றம்
அதேபோல அமெரிக்கா ஈரான் இடையேயான போர்ப் பதற்றமும் அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் ஈரானை லாக் செய்யும் வகையில் அமெரிக்கா கடற்படையைக் குவித்து வருகிறது. இதனால் அங்கு எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது.
மூன்றாவதாக அமெரிக்க டாலர் பலவீனமடைந்து வருகிறது. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க மதிப்பு உயர்ந்தாலும் கூட, இதர கரன்சிகளுக்கு எதிராக வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் யூரோ, பிரிட்டன் பவுண்டு உள்ளிட்ட சர்வதேச நாணயங்களுக்கு நிகரான டாலர் மதிப்பு சரிந்து வருகிறது. இவை எல்லாம் சேர்த்தே தங்கம் விலை உயரக் காரணமாக அமைந்துள்ளது.
விலை நிலவரம்
இந்த காரணங்களால் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் தங்கம் விலை நேற்று சட்டென குறைந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனையானது.
இன்றைய தினமும் தங்கம் விலை லேசாக குறைந்தது. இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.1,19,200க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.14,900க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.295க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்
27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200 (இன்று)
26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360 (நேற்று)
25.02.2026 - ஒரு சவன் ரூ.1,19,440
24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120
23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880
22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840
17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520
15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
-
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications