Gold Rate Today: கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உச்சத்தில் தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.400 உயர்வு
சென்னை: தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே தொடர்ச்சியாக உயர்ந்தே வருகிறது. இதனால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்கா உட்படச் சர்வதேச அளவில் நடக்கும் சில காரணங்களால் தங்கம் விலை இன்று உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இது குறித்து விரிவாக நாம் பார்க்கலாம்.
கடந்தாண்டு தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்தது. ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 80% உயர்ந்திருந்தது. அந்தளவுக்குத் தங்கம் விலை வரலாற்றிலேயே உயர்ந்தது இல்லை. இதனால் இந்தாண்டாவது தங்கம் விலை ஓரளவுக்குக் குறையும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தே வருகிறது. அது இன்றைய தினமும் தொடரும் என்றே தெரிகிறது.

3 காரணங்கள்
இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில் அமெரிக்க மத்திய வங்கிக்கும் ட்ரம்ப் நிர்வாகம் இடையே மோதல் அதிகரித்துள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் பவலுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.. இரண்டாவதாக டிரம்ப் வெனிசுலாவைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் மீது தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவருடைய கருத்துகளும் கூட தொடர்ச்சியாகச் சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது.
டாலர் சரிவு
அதேபோல அமெரிக்கப் பங்குச்சந்தையும் பெரியளவில் உயரவில்லை. மேலும், டாலர் மதிப்பும் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. பொதுவாகவே டாலர் மதிப்பு சரியும்போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும். டிரம்ப்- பெடரல் ரிசர்வ் பிரச்சினை, டிரம்பின் மிரட்டல்கள், டாலர் மதிப்பு ஆகிய 3 காரணங்களும் சேர்ந்து தங்கம் விலையைத் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே வைத்திருக்கிறது.
நேற்றைய தினம் சென்னையில் 22 காரட் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, புதிய உச்சம் தொட்டது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ரூ.13,120க்கு விற்பனையாகிறது. அதேபோல சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் 1,04,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287க்கு விற்பனையானது.
இன்றைய விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக அதிகரித்திருந்த நிலையில், இன்று அது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும். இன்றைய தினம் சென்னையில் உச்சம் தங்கம், வெள்ளி விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல சென்னையில் வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து, ரூ.2.92 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.2.92க்கு விற்பனையாகிறது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,660
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications