Gold Rate Today: வாரத்தின் முதல் வர்த்தக நாள் மிக பெரிய அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. தாறுமாறாக உயர்ந்தது!
சென்னை: இந்தாண்டு தங்கம் விலை கேப் விடாமல் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பது போலவே தெரியவில்லை. இதற்கிடையே வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றைய தினம் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்த தங்கம் விலை ரூ.1,07,600க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கொஞ்சம் குறையட்டும் பிறகு தங்கத்தை வாங்கலாம் என நினைப்போருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் விலை உயர்ந்தே வருகிறது. இதனால் ஏழை மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்கள் கூட தங்கத்தை வாங்க முடியாத சூழலே தொடர்கிறது.

காரணங்கள்
சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களே இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபரான டிரம்ப் கிரீன்லாந்து விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து கண்டிப்பாகத் தேவை எனச் சொல்லியிருக்கும் டிரம்ப் டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது 10% வரியை அறிவித்துள்ளார். இதனால் சர்வதேச பதற்றம் அதிகரித்தே இருக்கிறது. இதனால் தங்கம் விலை இன்றைய தினம் உயரும் என்றே தெரிகிறது.
விலை என்ன
கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சென்னையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து சனிக்கிழமை 1,06,240 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் சனிக்கிழமை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தது. இன்றைய தினம் திங்கள்கிழமை தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்பத் தங்கம் விலை மிக பெரியளவில் இன்று உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1360 உயர்ந்து, ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.8 உயர்ந்து, ரூ.318க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை
19.01.2026 (இன்று) - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications