Gold Rate Today: தங்கம் மார்கெட்டில் அடித்த சுனாமி.. ரூ.15,000 நெருங்கிய ஆபரண தங்கம்! வரலாறு காணாத உச்சம்
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் திருமணம் வைத்திருப்போர் தங்கத்திற்கே மிகப் பெரிய தொகையை ஒதுக்க வேண்டி இருக்கிறது. தங்கம் விலை இப்படித் தொடர்ந்து உச்சம் தொடரும் நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் விலை 2800 ரூபாய் உயர்ந்த நிலையில், பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 4120 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக வரலாறு காணாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு மட்டும் தங்கம் விலை சர்வதேச சந்தையிலேயே கிட்டத்தட்ட 70% உயர்ந்திருந்தது. இந்தியாவிலும் கூட அதை விட வேகமாகவே உயர்ந்து வந்தது. இந்தாண்டு 20 நாட்கள் கூட ஆகாத நிலையில், அதற்குள் 10% தங்கம் விலை உயர்ந்துவிட்டது.

காரணம்
இப்போது தங்கம் விலை இந்தளவுக்கு உயர டிரம்ப் மட்டுமே பிரதானக் காரணம். அவர் கிரீன்லாந்து விவகாரத்தைப் பெரிய விஷயமாக மாற்றுவதே தங்கம் விலை உயரக் காரணமாகும். அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும் என்றும் அதைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ராணுவ நடவடிக்கை கூட எடுப்பேன் என டிரம்ப் சொல்கிறார். அதை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளையும் மீதும் டிரம்ப் மிரட்டுகிறார்.
உச்சம்
பொதுவாகவே சர்வதேச பதற்றம் இருக்கும் போது தங்கம் விலை தானாகவே உயரும். இப்போதும் கூட அதுவே நடந்துள்ளது. கிரீன்லாந்து குறித்து டிரம்ப் பேச ஆரம்பித்தவுடனேயே தங்கம் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. அத்தோடு டாலர் மதிப்பு சரிவதும், ரூபாய் மதிப்பு பலவீனமாக இருப்பதும் சேர்ந்து தங்கம் விலையைப் புதிய உச்சத்திற்கு ஒவ்வொரு நாளும் கூட்டிச் செல்கிறது.
நேற்றைய தினம் காலை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ரூ.2320 உயர்ந்து, ரூ.1,11,200க்கு விற்பனையானது. அதாவது ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3600 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று மாலை 13,900க்கு விற்பனையானது. வெள்ளி விலை இப்போது கிராமுக்கு ரூ.340க்கு விற்பனையாகிறது.
இன்றைய விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் சூழலில், இந்தியாவிலும் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை 2800 ரூபாய் உயர்ந்துள்ளது.. ஒரு சவரன் ஆபரண தங்கம் சென்னையில் ரூ.1,14,00க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ரூ.14,250க்கு விற்பனையானது.
இதற்கிடையே 3 மணி நேர கேப்பில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. காலையில் 2800 ரூபாய் உயர்ந்த நிலையில், இப்போது மீண்டும் ரூ.1320 உயர்ந்துள்ளது. சென்னையில் இப்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,15,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.14,415க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை கடந்து வந்த பாதை
21.01.2026 (பிற்பகல்) - ஒரு சவரன் ரூ.1,15,320
21.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.1,14,000
20.01.2026 (மாலை) - ஒரு சவரன் ரூ.1,11,200
20.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.1,08,880
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
-
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications