Gold Rate Today: டிரம்ப் சொன்ன வார்த்தை.. இன்று தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. ஓவர் நைட்டில் மாறிய மார்கெட்!
சென்னை: அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த சில காலமாகவே தனது இஷ்டம் போலப் பேசி வருகிறார். இது நேரடியாகத் தங்க மார்கெட்டில் எதிரொலிக்கும் நிலையில், தங்கம் விலை எக்குத்தப்பாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நேற்று உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய டிரம்ப், கிரீன்லாந்து மீது போரில்லை என்று சொல்லி இருக்கிறார். இது தங்கம் விலையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று விலை தடாலடியாக சரிந்துள்ளது.
தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் குறைந்தாலும் கூட அதற்கும் வட்டியும் முதலுமாகச் சேர்த்து தங்கம் விலை உயர்ந்தே வருகிறது. 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை 10% வரை உயர்ந்துவிட்டது.

டிரம்ப்
தங்கம் விலை கடந்த சில காலமாகவே உயர டிரம்ப் தான் பிரதானக் காரணமாக இருந்து வந்தார். அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும் எனச் சொன்னதோடு மட்டும் இல்லாமல் அங்கு ராணுவத்தை அனுப்புகிறேன்.. அதை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரியை விதிக்கிறேன் என வாய்க்கு வந்ததைப் பேசினார். அது நேரடியாகவே தங்க மார்கெட்டில் எதிரொலித்தது.
அதாவது எப்போதுமே இதுபோன்ற குழப்பமோ அல்லது சர்வதேச பதற்றமோ இருக்கும்போது தங்கம் விலை உயரும். இதுபோன்ற குழப்பமான சூழல்களில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குச்சந்தை முதலீடுகளை விற்றுவிட்டு, பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அதுவே இப்போதும் நடந்துள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.
முக்கியமான பேச்சு
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் நடந்த உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய டிரம்ப், கிரீன்லாந்து விவகாரம் குறித்தும் சற்று பேசியிருந்தார். அங்கும் கூட உலக பாதுகாப்புக்கு கிரீன்லாந்து முக்கியம் என்றும் டென்மார்க்கால் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என்பதாலேயே அமெரிக்காவிடம் கேட்கிறோம் என்றும் பேசியிருந்தார். மேலும், கிரீன்லாந்தைத் தர மறுத்தால் அதை நிச்சயம் அமெரிக்கா மனதில் வைத்து இருக்கும் என்றும் குறிப்பிட்டார். அதேநேரம் கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்பதையும் உறுதிப்படத் தெரிவித்தார்.
ஓவர் நைட்டில் மாற்றம்
டிரம்ப் சொன்ன இந்த வார்த்தையே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கிரீன்லாந்து குறித்து அவர் பேசியிருந்தாலும் போர் இல்லை. வரி இல்லை என அவர் பேசியுள்ளது பாசிட்டிவ் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்தப் பேச்சுக்கு பிறகே சர்வதேச அளவில் பங்குச்சந்தை ஏறியது. தங்கம் விலை சரிந்தது. எனவே, அதை நிலை இந்தியாவிலும் தொடர்கிறது.
விலை என்ன
சென்னையில் நேற்றைய தினம் ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது. காலை ஒரு முறை உயர்ந்த நிலையில், பிற்பகலிலேயே மீண்டும் ஒரு முறை உயர்ந்தது. ஆபரணத் தங்கம் காலையில் 2800 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.1320 உயர்ந்தது. சென்னையில் நேற்று பிற்பகல் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,15,320க்கு விற்பனையாகிறது. அதேபோல 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.14,415க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 சரிந்து, ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.215 சரிந்து, ரூ.14,200க்கு விற்பனையாகிறது. அதேபோல சென்னையில் வெள்ளி விலையும் சரிந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது.
21.01.2026 (பிற்பகல்) - ஒரு சவரன் ரூ.1,15,320
21.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00
20.01.2026 (மாலை) - ஒரு சவரன் ரூ.1,11,200
20.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.1,08,880
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications