Gold Rate Today: தங்கம் பக்கமே போகாதீங்க.. இன்று ஒரே நாளில் எகிறியது.. கலக்கத்தில் பொதுமக்கள்
சென்னை: சர்வதேச மோதல் காரணங்களால் தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து குறைந்து வந்தது. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயரும் நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1680 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதலே சரிந்து வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையே வெடித்த போர் தான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது இந்த போரால் கச்சா எண்ணெய் வணிகம் பாதிக்கப்பட்டது. இதனால் டாலர் மதிப்பு உயர்ந்து, தங்கம் விலை சரியும் சூழல் உருவானது.

சர்வதேச சூழல்
இரு தரப்பும் எப்போது எல்லாம் பேச்சுவார்த்தை நடத்துகிறதோ அப்போது எல்லாம் தங்கம் விலை உயரும். மோதல் என வரும்போது தங்கம் விலை சரியும். இதே தான் மாறி மாறி நடந்து வந்தது. கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டபோது கூட தங்கம் விலை உயர்ந்திருந்தது. அந்த அமைதி ஒப்பந்தம் முறிந்து மீண்டும் மோதல் தொடங்கிய போது தங்கம் விலை மீண்டும் சரிந்தது.
இந்தச் சூழலில் தான் இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியான உடனேயே தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர ஆரம்பித்துவிட்டது. மிக பெரிய ஏற்றம் இல்லை என்றாலும் கூட தங்கம் விலை லேசாக உயர்ந்தே வருகிறது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் 1.9 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,082 டாலராக வர்த்தகமானது. ஆகஸ்ட் மாத கோல்ட் ஃபியூச்சர்ஸ் கூட 1.8 சதவீதம் உயர்ந்து 4,089 டாலரில் வர்த்தகமானது.
வல்லுநர்கள்
இது தொடர்பாக Marex நிறுவனத்தின் ஆய்வாளர் எட்வர்ட் மெயர் கூறுகையில், "மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பால் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்" என்றார்.
அடுத்து அமெரிக்க பணவீக்கமும் தங்கம் விலையில் முக்கியத்துவம் பெறும். அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடக்கிறது. இந்த முறை வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்ற போதிலும் அவர் என்ன சொல்கிறார் என்பதை பொறுத்தே தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். வரும் காலத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவோம் என்பது போல அவர் சொன்னால் தங்கம் சரியும் என்பதில் சந்தேகம் இல்லை.
தங்கம் விலை
நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை உயர்ந்தது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனையானது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து, ரூ.13,220க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.240க்கு விற்பனையானது.
சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை சமீப நாட்களில் இல்லாத அளவுக்கு மிக பெரியளவில் உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு சவரன், ரூ.1680 உயர்ந்து, ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.210 உயர்ந்து, ரூ.13,430க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் 5 ரூபாய் உயர்ந்து, ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் - கடந்து வந்த பாதை
22-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440


Click it and Unblock the Notifications
