Gold Rate Today: மிக பெரியளவில் சரியும் தங்கம் விலை.. இன்று பெரிய ஜாக்பாட் காத்திருக்கு
சென்னை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை பெரியளவில் சரிந்துள்ளது. அதுவே இன்று இந்தியச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும், அது தங்கத்தின் விலையை உயர்த்த காரணமாக இல்லை. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,082 டாலராகக் குறைந்தது. அதேபோல், ஆகஸ்ட் மாதத்திற்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் ஒரு அவுன்ஸ் 4096 டாலருக்கு வர்த்தகமானது.

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்தும் பிற நாடுகளுக்குத் தங்கம் வாங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்திற்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தனை காலமாக மத்திய கிழக்கில் இருக்கும் நிலைமையைப் பொறுத்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன. ஆனால், இப்போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதே முக்கியமானதாக மாறியுள்ளது.
காரணம்
அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பெடரல் ரிசர்வ் தலைவரான கெவின் வார்ஷ் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்பது போல கூறியுள்ளார். வரவிருக்கும் டிசம்பர் மாதக் கூட்டத்தில் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு 86 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த வாரம் பெடரல் கூட்டத்திற்கு முன்பு வெறும் 61 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாகப் பணவீக்க காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அதிக வட்டி விகிதங்கள் உள்ள சூழலில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
புவிசார் அரசியல் ரீதியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஈரான் மீதான சில தடைகளை அமெரிக்கா 60 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. லெபனானில் தொடர்ந்து பதற்றங்கள் நீடித்து வந்தபோதிலும், தற்போது பேச்சுவார்த்தை நல்ல நிலையிலேயே செல்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து தற்போது மீண்டும் சீரடைந்துள்ளது. இதன் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் சரிந்துள்ளது.
தங்கம்
நேற்றைய தினம் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480க்கும் விற்பனையானது. அதேபோல வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது..
23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480
22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560
18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை)
18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை)
17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240
16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560












Click it and Unblock the Notifications