Gold Rate Today: காலையிலேயே வந்த அதிர்ச்சி.. எகிறி அடிக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்தே வந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இப்போது தங்கம் விலை திடீரென யூட்ர்ன் போட்டு இருக்கிறது. இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்கப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.235க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் பொதுமக்களுக்கு எப்போதுமே தங்கம் தான் முதல் சேமிப்பாக இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். கையில் கொஞ்சம் காசு இருந்தாலும் கூட பொதுமக்கள் தங்கத்தையே வாங்குவார்கள். நீண்ட கால நோக்கில் தங்கம் விலை சரியாது என்பதே அதற்கு முக்கியமான காரணம். இதனால் தான் உலகிலேயே அதிகம் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக எப்போதுமே இந்தியா இருக்கும்.

Gold Rate Today Gold Rate Gold

தங்கம்

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. கண்ணை மூடி திறப்பதற்குள் தங்கம் விலை உச்சத்திற்குப் போனது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் கூட ரூ.15,000ஐ தாண்டியிருந்தது. ஆனால், மார்ச் மாதம் முதல் இந்த நிலைமை மாறியது. தங்கம் விலை உயர்வது நின்றதோடு மட்டுமின்றி குறையவும் தொடங்கியது.

அமெரிக்கா ஈரான் இடையேயான போர் தான் இதற்கு முக்கிய காரணம்! அமெரிக்கா ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்குப் போனது. இதனால் டாலர் மதிப்பு வலுவடைந்த நிலையில், தங்கம் விலை சரியத் தொடங்கியது. கடந்த 3 மாதங்களாகவே போர் நிற்பது போல வந்தால் தங்கம் விலை உயர்வதும், போர் பதற்றம் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தங்கம் விலை குறைவதுமே மாறி மாறி நடந்து வந்தது.

வட்டி விகிதம்

இப்போது போர் முடிந்துவிட்ட நிலையில், தங்கம் விலை உயருமோ என மக்கள் நினைத்தனர். இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறதாம். அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆலோசனை செய்து வருகிறது. இதன் காரணமாகவே இப்போது தங்கம் விலை சரிந்து வருகிறது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4 வாரங்களாக தொடர்ந்து குறைந்தே வருகிறது. அது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவிலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால், இன்றைய தினம் தங்கம் விலை சட்டென அதிகரித்துள்ளது. இது தற்காலிக அதிகரிப்பா இல்லை டிரெண்ட் மாறிவிட்டதா என்பதே மக்களிடையே இருக்கும் குழப்பமாக இருக்கிறது. ஆனால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதால் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளைப் போல விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, எகிறி அடிக்காது என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.235க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை

25.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,120

24.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800

23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480

22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560

18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை)

18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை)

17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240

16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480

15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+