Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கு மோதலால் பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் போர் ஆரம்பித்தது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பெரியளவில் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை மிக பெரியளவில் சரிந்தது.. ஒரே நாளில் காலை, மாலை என 7,600 குறைந்து இருந்த நிலையில் பின்னர் மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

Gold Price Gold

சர்வதேச சந்தை

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. குறிப்பாக ஈரான் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது ஈரான் போர் ஆரம்பித்தால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மற்றும் டாலர் பக்கம் திரும்பியுள்ளனர். அதாவது முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று, டாலர் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதனால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் ஓரிரு நாட்களைத் தவிரத் தங்கம் விலை தொடர்ந்து மிகப் பெரியளவில் குறைந்தே வருகிறது. உலக பொருளாதார சிக்கல் வரும்போது, டாலர் தான் எப்போதும் கரன்சி கிங் என்பதை மீண்டும் உணர்த்துவதாகவே இருக்கிறது.

அமெரிக்கா சொன்ன செய்தி

இதற்கிடையே அமெரிக்கா மேலும் கூடுதல் படைகளை ஈரானுக்கு அனுப்புவதாகக் கடந்த வாரம் அறிவித்தது. இதுவரை ஏவுகணை தாக்குதல்கள் மட்டுமே நடந்து வரும் சூழலில், நேரடியாக ராணுவத்தை இறக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா சொல்லவே கச்சா எண்ணெய் பறந்துவிட்டது. டிரம்ப் அதுபோல நேரடியாக ராணுவத்தை இறக்க வாய்ப்பு குறைவு என்றாலும் இதுபோல ஆலோசித்து வருவதே சந்தைக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய் உயர்ந்து, தங்கம் விலை தாறுமாறாகக் குறைகிறது.

தங்கம் விலை

போர் எவ்வளவு காலம் தொடர்கிறதோ.. அவ்வளவு காலம் தங்கம் விலை சரிவு தொடரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மார்கெட் இல்லை. நேற்று முன்தினம் சனிக்கிழமை தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்றைய தினம் ரூ 2640 சரிந்தது, ரூ.1,08,960-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620க்கு விற்பனையானது.

இன்றைய தினம்

இன்றைய தினமும் தங்கம் விலை மிக பெரியளவில் சரிந்துள்ளது.. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ரூ.12,950க்கு விற்பனையானது. பின்னர் மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. காலை, பிற்பகல் என இரு வேளையும் தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.

காலை, பிற்பகல் என சவரனுக்கு ரூ.7,600 குறைந்து இருந்த நிலையில் தற்போது மாலையில் தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. குறைந்துக்கொண்டே வந்த தங்கம் விலை திடீரென அதிகரித்துள்ளது. தற்போது மாலை 6 மணியளவில் ரூ.5360 அதிகரித்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் சவரன் தங்கம் விலை ரூ.1,06,720-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.13,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.235க்கு விற்பனையானது. ஆனால் மாலையில் அப்படியே ரூ.15 உயர்ந்து மீண்டும் ரூ.250-க்கு விற்பனை ஆகின்றது.

விலை நிலவரம்

23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720

23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600

22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960

21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960

20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600

19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)

19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)

18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560

17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200

16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680

15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080

14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080

13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200

12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760

11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960

10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400

9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+