Gold Rate Today: தொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,560 குறைந்தது.. தடாலடியாக சரிவு!
சென்னை: கடந்த சனிக்கிழமை மத்திய கிழக்கில் போர் வெடித்தது. வழக்கமாக இதுபோன்ற காலங்களில் தங்கம் விலை உயரவே செய்யும். ஆனால், இந்த முறை அதற்கு நேர்மாறாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று வாரத்தின் முதல் வர்த்தக நாளில் தங்கம் விலை சரிந்திருந்த நிலையில், இன்றைய தினமும் குறைந்தது. தொடர்ந்து மாலையிலும் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது.
இப்போது எல்லாம் தங்கம் விலை கணிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தங்கம் விலை எப்போது ஏறும், எப்போது குறையும் எனக் கணிக்க முடியாத அளவுக்கு மார்கெட் போய்விட்டது. இதனால் பொதுமக்கள் பிளான் செய்து தங்கம் வாங்க முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் சில வாரங்களாக ஒருவித பதற்றமான சூழல் நிலவி வந்தது. அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றி தனது கடற்படையைக் குவித்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் இணைந்து முழு வீச்சில் தங்கள் தாக்குதலைத் தொடங்கியது. ஈரானின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவரோடு மேலும் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடும் கொந்தளிப்பில் இருக்கும் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் ஒருவித போர் பதற்றம் உருவாகியுள்ளது.
தங்கம் விலையில் ட்விஸ்ட்
பொதுவாக இதுபோல பதற்றமான சூழல்களில் தங்கம் விலை உயரவே செய்யும். ஏனென்றால் இப்படி பதற்றம் ஏற்படும்போது, சர்வதேச வணிகத்தில் நிலையற்ற சூழல் ஏற்படும். இதனால் பங்குச்சந்தைகள் சரியும் சூழலில், அடுத்து என்ன என்பதில் நிச்சயமற்ற நிலை உருவாகும். அதுபோன்ற சூழல்களில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கித் திரும்புவார்கள். இதனால் பதற்றமான சூழல்களில் தங்கம் விலை உயரும்.
ஆனால், இந்த முறை வினோதமாக ஒரு விஷயம் நடக்கிறது. சனிக்கிழமை போர் தொடங்கிய நிலையில். ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை உச்சத்திற்குப் போனது. இருப்பினும், அதன் பிறகு இரு நாட்கள் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதே இதற்குப் புராதன காரணமாக இருக்கிறது. மேலும், பங்குச்சந்தை சரியும் நிலையில், தங்கத்தில் கிடைக்கும் லாபத்தை விற்று, பங்குச்சந்தை நஷ்டத்தையும் கவர் செய்கிறார்கள். இதை பிராபிட் புக்கிங் (profit booking) என்பார்கள். இந்த இரண்டுமே தங்கம் விலை சரியக் காரணமாக இருக்கிறது.
மாலையிலும் சரிந்தது தங்கம் விலை
நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து, ரூ.15,660 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280 விற்பனையானது.. இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது.
சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் மாலையில் மேலும் தங்கம் விலை சரிந்தது. இதன்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.185 குறைந்து ரூ.15,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை இன்று மாலை ரூ.1,480 குறைந்து ரூ.1,23,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது.
தங்கம் விலை நிலவரம்
03.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (இன்று மாலை)
3.03.2026 - ஒரு சவரன் 1,25,200 (இன்று)
2.03.2026 - ஒரு சவரன் 1,25,280 (நேற்று)
1.03.2026 - ஒரு சவரன் 1,26,200
28.02.2026 - ஒரு சவரன் 1,24,400 (பிற்பகல்)
28.02.2026 - ஒரு சவரன் 1,21,600 (காலை)
27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360












Click it and Unblock the Notifications