Gold Rate Today: இன்றும் சரிந்தது தங்கம் விலை.. நகைகளை அள்ள இதுவே மிகச் சிறந்த சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று ரூ.2,120 குறைந்து 1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.டாலர் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த போர் வெடித்த இரண்டு நாட்கள் ஒரேயடியாக எகிறிய தங்கம் விலை, அதன் பிறகு திடீரென யூடர்ன் போட்டுக் குறைந்து வருகிறது. பெரியளவில் தங்கம் விலை குறையவில்லை என்றாலும் கூட கடந்த இரு நாட்களாகவே தங்கம் விலை சீராகக் குறைந்தே வருகிறது.

டாலர் மதிப்பு
இதற்கு அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வதே முக்கிய காரணமாக இருக்கிறது. மார்கெட்டின் எச்சரிக்கை உணர்வு மற்றும் சப்ளை காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தங்கம் விலை சரிய ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக காமர்ஸ்பேங்கின் ஆய்வாளர் தூ லான் நிகுயென் கூறுகையில், "மத்திய கிழக்கு போரால் ஏற்படும் பணவீக்க அபாயங்களுக்குச் சந்தை முக்கியத்துவம் அளிப்பதே, விலை குறையக் காரணமாகும். இதனால் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்பதால் அமெரிக்க டாலர் வலிமை உயர்ந்து வருகிறது" என்றார். பொதுவாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை உயரும். வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கம் விலை குறையும்! அதுவே இப்போது நடந்துள்ளது.
சீக்கிரமே உயரும்
இருப்பினும், பிஎம்ஐ உள்ளிட்ட ஆய்வாளர்கள் தங்கம் விலை சரிவு தற்காலிகமானது என்றே சொல்கிறார்கள். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் அடுத்த சில நாட்களில் முடிய வேண்டும். அப்படி இல்லையென்றால் இன்னும் 4, 5 நாட்களில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
தங்கம் விலை
நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. சவரன் தங்கம் விலை இன்று மாலை ரூ.1,480 குறைந்து ரூ.1,23,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை மாலையில் ரூ.185 குறைந்து ரூ.15,465-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் கணிசமாகவே தங்கம் விலை சரிந்த நிலையில், இந்தியாவிலும் கூட அதுவே எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 265 குறைந்து ரூ.15,200க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.2,120 குறைந்து ரூபாய் 1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600 (இன்று)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (நேற்று மாலை)
3.03.2026 - ஒரு சவரன் 1,25,200 (நேற்று காலை)
2.03.2026 - ஒரு சவரன் 1,25,280
1.03.2026 - ஒரு சவரன் 1,26,200
28.02.2026 - ஒரு சவரன் 1,24,400 (பிற்பகல்)
28.02.2026 - ஒரு சவரன் 1,21,600 (காலை)
27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360
25.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,440
24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120
23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880
22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360












Click it and Unblock the Notifications