Gold Rate Today: எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று பெரியளவில் உயர்ந்தது.. கலக்கத்தில் நகை பிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த போர் மேகங்கள் விலகி, ஒரு புதிய சமாதான ஒப்பந்தத்தை நோக்கி இரு நாடுகளும் நகர்ந்து வருகிறது. இது சர்வதேச சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே சர்வதேச சந்தையில் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்போது தான் சர்வதேச சந்தைகள் சற்று நிம்மதி அடைந்துள்ளது.

Gold Price Gold

கச்சா எண்ணெய்

ஏற்கனவே இதனால் கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்துவிட்டது. போர் உச்சத்தில் இருந்த போது 120 டாலர் வரை போன ஸ்பாட் கச்சா எண்ணெய் விலை, இப்போது 100 டாலருக்கு குறைந்துள்ளது. மேலும், தங்கம் விலையும் இதனால் ஏற ஆரம்பித்துள்ளது. இன்று ஸ்பாட் கோல்ட் விலை 2.8% உயர்ந்து 4,685.23 டாலராக ஒரு அவுன்ஸ் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் இதுதான் அதிகபட்ச விலையாகும்.

காரணம் என்ன

அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற சிக்கலான விஷயங்களைத் தள்ளிவைத்துவிட்டு, இப்போதைக்கு வளைகுடாப் பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்தச் செய்தியால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

பொதுவாக எண்ணெய் விலை குறைந்தால் பணவீக்க அச்சம் குறையும். இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு வரும்போது, முதலீட்டாளர்கள் வட்டி தராத தங்கம் மீது அதிக முதலீடுகளைக் குவிக்கத் தொடங்குவார்கள். அதுதான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தங்கம் மட்டுமல்லாது பிற உலோகங்களின் விலையும் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளன.

தங்கம் விலை

நேற்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1840 உயர்ந்து, ரூ.1,12,400க்கு விற்கப்பட்டது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ.230 உயர்ந்து ரூ.14050க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றை தினம் சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,150க்கு விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை

07-05-2026- ஒரு சவரன் ரூ. 1,13,200

06-05-2026- ஒரு சவரன் ரூ. 1,12,400

05-05-2026- ஒரு சவரன் ரூ. 1,10,560

04-05-2026- ஒரு சவரன் ரூ. 1,12,000

03.05.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,000

02.05.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,000

01.05.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,360

30.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800

29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,200 (மாலை)

29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600 (காலை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+