Gold Rate Today: ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.. 11 மாதங்களுக்கு பிறகு வரலாறு காணாத சரிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையிலும் ஆபரணத் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் சரிந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருவதற்கு அமெரிக்க டாலரின் வலிமை, அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் வட்டி விகிதங்கள் மேலும் உயரக்கூடும் என்ற ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன. இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

gold gold rate today silver silver rate today

சர்வதேச சந்தை

நேற்றிரவு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,830.74 டாலராக குறைந்தது. கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதிக்கு பிறகு பதிவான மிக குறைந்த விலை இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594.82 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது அதிலிருந்து 31.5 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது இதன் மூலம் 2015ம் ஆண்டுக்கு பிறகு தங்கம் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலர்

மறுபுறம் அமெரிக்க டாலர் கடந்த ஏப்ரல் 2025க்கு பிறகு இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. இதனால் மற்ற நாட்டு கரன்சிகளை கொண்ட முதலீட்டாளர்களுக்கு டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கத்தை வாங்குவது செலவு அதிகமானதாக மாறியுள்ளது. மேலும், அமெரிக்க மத்திய வங்கி டிசம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பும் தங்கத்தின் விலை சரிய காரணமாக இருக்கிறது.

இதற்கிடையே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் உயரும்போது தங்கம் விலை சரியும் இப்போதும் கூட அதுவே தான் நடக்கிறது.

உலக நாடுகள்

மறுபுறம் உலக நாடுகள் தங்கம் வாங்குவதும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உலக நாடுகள் சுமார் 675 டன் தங்கத்தை வாங்கியதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்திருந்தது. அதிக அளவில் தங்கம் வாங்கி வந்த போலந்து, தனது 700 டன் தங்க இருப்பு இலக்கை எட்டியுள்ளதால், நவம்பர் மாதத்தில் அதன் கொள்முதல் குறைக்கும். சீனாவை தவிர மற்ற நாடுகள் தங்கம் வாங்குவதை குறைத்துள்ளது இந்திய சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.

இன்றைய தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.99,760க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை

17-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.99,760

16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,320

15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920

14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920

13-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,560

12-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,520

11-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,120

10-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,680

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+