Gold Rate Today: படுத்தே விட்டது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.2,040 குறைந்தது.. வரலாறு காணாத சரிவு
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 குறைந்து, ரூ.97,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை சீராக சரிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிப்ரவரி மாதம் கடைசியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எப்போது மோதல் வெடித்ததோ அப்போது முதலே தங்கம் விலை சரிந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் தங்கம் விலை உயர்ந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தங்கம் விலை சரிந்தே வருகிறது.

சர்வதேச மார்கெட்
இப்போதும் கூட அதே டிரெண்ட் தான் தொடர்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதன்கிழமை 1.4% சரிந்து ஒரு அவுன்ஸ் 3,796.37 டாலராக குறைந்தது. கடந்த 2025 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தங்கம் விலை இந்தளவுக்கு சரிவது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் டிசம்பர் மாதத்துக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் விலையும் 1.7% குறைந்து 3,799.30 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான காரணமாகும். அமெரிக்க டாலரின் மதிப்பு 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளதால், டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கத்தை மற்ற நாட்டு முதலீட்டாளர்கள் வாங்கும் போது அதிகம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் தங்கத்தின் தேவை மற்றும் விலை பாதிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள்
அதேபோல அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் தங்கம் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வேண்டியிருக்கலாம் என்று நியூயார்க் பெடரல் வங்கியின் தலைவர் ஜான் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் நிச்சயம் அமெரிக்கா தனது வட்டி விகிதங்களை உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்கள் உயரும்போது, வட்டி வருமானம் தராத தங்கத்தில் முதலீடு செய்வதைவிட பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளே அதிக லாபகரமானதாக மாறுகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு, மற்ற விஷயங்களில் முதலீடுகளை செய்வார்கள். இதுவும் தங்கம் விலை சரிய மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது.
இத்தோடு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் தங்கம் விலை சரிய காரணமாக இருக்கிறது. அடுத்த ஓரிரு மாதங்களுக்கும் இதை நிலை தான் தொடரும் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தங்கம் விலை
சென்னையில் நேற்று தங்கம் விலை சரிந்த நிலையில், இன்று மேலும் பெரிய அளவில் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ரூ.97,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.255 சரிந்து ரூ.12,215 ஆக உள்ளது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.185க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
18-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.97,720
17-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.99,760
16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,320
15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920
14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920
13-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,560
12-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,520
11-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,120
10-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,680


Click it and Unblock the Notifications
