Gold Rate Today: இன்று டபுள் போனஸ் கொடுத்த தங்கம் விலை.. தடாலடியாக குறைய தொடங்கியது.. ஒரே நாளில் ரூ.3680 சரிவு!
சென்னை: தங்கம் விலை கடந்த ஓரிரு நாட்களாகத் தங்கம் விலை மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிக பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அது இந்தியாவிலும் எதிரொலித்தது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.3680 குறைந்துள்ளது.
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. டிரம்ப் எடுத்த தடாலடி நடவடிக்கைகள் காரணமாகத் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இவ்வாண்டு தொடக்கத்தில் கூட 7200 என்ற ரேஞ்சில் இருந்த தங்கம் விலை சில மாதங்களில் இப்போது ரூ.11,000ஐ தாண்டிவிட்டது. இதனால் பொதுமக்களால் தங்கத்தை வாங்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.

சர்வதேச சந்தை
ஆனால், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஓரளவுக்குக் குறைந்தே வருகிறது. இது பொதுமக்களுக்குச் சற்றே ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது. அது இன்றைய தினமும் தொடர்ந்துள்ளது.. ஏனென்றால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரே நாளில் 5%க்கு மேல் குறைந்துள்ளது. இந்தியாவில் அவ்வளவு குறையவில்லை என்றாலும் கணிசமாகக் குறைந்துள்ளது.
இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் அமெரிக்க ஷட்டவுன் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அமெரிக்கா சீனா இடையே ஒரு வர்த்தக டீலும் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. டிரம்பே கூட சீனா மீது 100% வரி தொடர்ச்சியாகப் போடுவது சாத்தியமில்லாத ஒன்று எனக் கூறியிருந்தார். எனவே, நிச்சயம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர்ப் பதற்றம் முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது.
குறையும் தங்கம்
இந்தக் காரணங்களால் தங்கம் விலை அடுத்த ஓரிரு வாரங்கள் குறையும் என்றே சர்வதேச வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தாண்டு தொடக்கம் முதல் உயர்ந்த அளவுக்குக் குறைய வாய்ப்பில்லை என்றாலும் ஓரளவுக்கு நிச்சயம் குறையும். இது மக்களுக்குச் சற்றே நிம்மதி தரும் செய்தியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய விலை
இந்தியாவில் தங்கம் விலையைப் பொறுத்தவரை நேற்று காலை கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்த தங்கம், நேற்று மாலையில் சரிந்தது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்திருந்தது. இப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், இந்தியா சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2400 குறைந்து, ரூ. 93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.300 குறைந்து, ரூ.11,700க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. மாலையில் ஆபரண தங்கம் சவரனுக்கு மீண்டும் ரூ.1280 குறைந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.160 குறைந்து, ரூ.11,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரே நாளில் ஒரு நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.3680 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை
21.10.2025 (மாலை)- ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600












Click it and Unblock the Notifications