Gold Rate Today: தள்ளாடும் தங்கம் விலை.. நாளுக்கு நாள் நிலைமை மோசம்.. இன்றும் எவ்வளவு சரிவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டில் மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தைகளில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றிரவு சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை பெரியளவில் சரியவில்லை என்றாலும் லேசாக சரிந்தது. அதேபோல இந்தியாவிலும் தங்கம் விலை இன்றைய தினம் சற்றே குறைந்தது.

இந்தாண்டில் முதலில் இரு மாதங்கள் உச்சம் தொட்ட தங்கம் விலை, பிறகு சீராக குறைந்தது. வளைகுடாவில் போர் தொடங்கி கச்சா எண்ணெய் சப்ளையில் நிச்சயமற்ற சூழல் இருந்தபோது, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இருப்பினும், கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை யூடர்ன் போட்டு மீண்டும் சரிய ஆரம்பித்தது.

Gold Price Gold

அமெரிக்க பெடரல்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக அறிவித்ததே இதற்கு பிரதான காரணமாகும். இந்த அறிவிப்பு வந்த பிறகு தங்கம் விலை சீராக குறைந்து வருகிறது. வரும் காலங்களில் அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை மேலும் கடுமையாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்க விலை மேலும் சரியும் என தெரிகிறது.

ஏனென்றால் டிசம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பே அதிகம் என சந்தை கருதுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேலும் வட்டியை உயர்த்த வேண்டி இருக்கலாம் என்கிறார்கள். வலுவான தேவை மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகள் பணவீக்கத்தை அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டி இருக்கிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்திருந்தாலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் உயர்த்தும் என எதிர்பார்ப்பே மார்கெட் முழுக்க இருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக டாலர் மதிப்பும் உயர்ந்து வருகிறது. பொதுவாக டாலர் வலுப்பெறும்போது, தங்கத்தின் மீதான முதலீடு குறையும். தற்போது தங்கம் விலை குறைய இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.

இதனிடையே மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையையும் உலக சந்தைகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. போர் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் பணவீக்கம் ஏற்பட்டு, அமெரிக்கா மட்டுமின்றி மற்ற உலக நாடுகளும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு அதிகம் அப்படி நடந்தால் சர்வதேச அளவில் தங்கம் விலை குறையும்.

சர்வதேச மார்கெட்

சர்வதேச மார்கெட்டில் ஜனவரி மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,594.82 டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதில் இருந்து தற்போது தங்கத்தின் விலை 22 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ளது. இப்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ஸ்பாட் விலை 0.4 சதவீதம் குறைந்து 4,325.03 டாலராக இருந்தது. கோல்ட் ப்யூச்சர்ஸ் விலையும் 0.5 சதவீதம் சரிந்து 4,362 டாலராக பதிவானது.

தங்கம் விலை

சென்னையில் நேற்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை தடாலடியாக குறைந்தது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,13,480க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து, ரூ.14,185க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285க்கு விற்பனையாகிறது.

இன்றைய தினம் தங்கம் விலை சென்னையில் லேசாக குறைந்தது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,13,080க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.14,135க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம். ரூ.255க்கு விற்பனையாகிறது.

23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,080

21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480

20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280

19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280

18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240

17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+