Gold Rate Today: படுத்தேவிட்டது தங்கம் விலை.. இன்று இருக்கு பாருங்க கச்சேரி.. தாறுமாறாக சரிந்தது
சென்னை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த சரிவு தொடரும் நிலையில், இன்றும் தங்கம் விலை பெரியளவில் குறைந்தது. ஆபரண தங்கம் ரூ.1080 குறைந்துள்ளது.
நமது நாட்டில் இப்போது பண்டிகை சீசன் தொடங்கிவிட்டது. தங்கம் என்ன தான் உச்சத்திற்கு போனாலும் கூட நமது மக்கள் இந்த பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவதை வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள். இந்தாண்டு மக்களுக்கு இன்ப செய்தியாக இந்த பண்டிகை காலத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

அமெரிக்க டாலர்
இதற்கு பிரதான காரணமே அமெரிக்க டாலர் தான்.. அமெரிக்க டாலர் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. இதனால் டாலரில் விலை வர்த்தகமாகும் தங்கத்தை பிற நாட்டு கரன்சிகளை வைத்திருப்பவர்கள் வாங்க அதிக செலவாகிறது. இதுவும் தங்கம் விலை சரிய பிரதான காரணமாக இருக்கிறது. மேலும், பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் கருத்துகள், அமெரிக்க வட்டி விகிதங்கள், பத்திரங்களின் வருவாய் மற்றும் டாலரின் மதிப்பு என எல்லாமே தங்கம் விலை சரியவே காரணமாக இருக்கிறது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்த கடந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் உயர்த்தி 3.75% முதல் 4% என்ற அளவுக்கு கொண்டு சென்றது. வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும் என்ற அச்சம் அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ஒரு வட்டி உயர்வு இருக்கலாம் என்றும் தெரிகிறது.
பொதுவாக பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. ஆனால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, வட்டி வருவாய் தரும் முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் செல்வதால் தங்கத்தின் முதலீடு குறைந்து விலையும் குறைகிறது.
சர்வதேச சந்தை
நேற்றிரவும் கூட சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை 1.75% குறைந்து ஒரு அவுன்ஸ் 4,278 டாலராக இருந்தது. அதேபோல் டிசம்பர் மாத டெலிவரிக்கான அமெரிக்க கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலையும் 1%க்கு மேல் சரிந்து வர்த்தகமானது. இது இந்தியா சந்தையிலும் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை
சென்னையில் நேற்றைய தினம் தங்கம் விலை லேசாக குறைந்தது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,13,080க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.14,135க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம். ரூ.255க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை தடாலடியாக குறைந்தது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து, ரூ.1,12,000க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.135 குறைந்து, ரூ.14,000க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080


Click it and Unblock the Notifications
