Gold Rate Today: மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.68,000 தாண்டியது
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோகல் வரியை அறிவிக்கப் போகிறார். இது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் இக்கட்டான சூழலை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் ஏற்கனவே கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.68,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. கொரோனா சமயத்தில் பாயத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை. இடையில் இறக்குமதி வரி குறைப்பு, டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்ற சமயம் உள்ளிட்ட காலங்களில் தங்கம் விலை குறைந்தது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

தங்கம் விலையைப் பொறுத்தவரை 22 கேரட் தங்கம் ஒரு கிராம் கடந்த மார்ச் 25ம் தேதி அது ரூ.8185க்கு விற்பனை செய்யப்பட்டது.. அதன் பிறகு கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வந்தது. மார்ச் 26ம் தேதி ரூ.10 உயர்ந்த தங்கம் விலை, மார்ச் 27ம் தேதி 40 ரூபாயும், மார்ச் 28ம் தேதி ரூ.105, மார்ச் 29ம் தேதி ரூ.20 உயர்ந்தது. மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே தங்கம் விலை நேற்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. நேற்று காலை 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8425க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை தங்கம் விலை மேலும் ஒரு முறை உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.67,600க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8450க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.113க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை இப்படி தொடர்ச்சியாக உயர டிரம்ப் தான் காரணமாக இருக்கிறார். டிரம்ப் நாளை ஏப்ரல் 2ம் தேதி ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்கப் போகிறார். அதாவது அமெரிக்கா மீது ஒரு நாடு எவ்வளவு வரி வசூலிக்கிறதோ.. அதே அளவு வரியை அமெரிக்காவும் வசூலிக்கும்.. இதுவே ரெசிப்ரோக்கல் வரியின் அடிப்படை. இதுபோல வரி அறிவிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள்.
இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்லது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.68,000 தாண்டியது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.8510க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.68,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
1.04.2025- ரூ.68,080
31.03.2025- ஒரு சவரன் ரூ.67,600 (மாலை)
31.03.2025- ஒரு சவரன் ரூ.67,400 (காலை)
30.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
29.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
28.03.2025- ஒரு சவரன் ரூ.66,720
27.03.2025- ஒரு சவரன் ரூ.65,880
26.03.2025- ஒரு சவரன் ரூ.66,560
25.03.2025- ஒரு சவரன் ரூ.65,480
24.03.2025- ஒரு சவரன் ரூ.65,720
23.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
22.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
21.03.2025- ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025- ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025- ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025- ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025- ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025- ஒரு சவரன் ரூ.66,400 (பகல்)
14.03.2025- ஒரு சவரன் ரூ.65,840 (காலை)
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400












Click it and Unblock the Notifications