Gold Rate Today: 3வது நாளாக ஜாக்பாட்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு.. ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் முதல் வாரம் முதலே தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் ஏற்றம் பெற்று வந்த நிலையில், தொடர்ந்து 2வது குறைவாக குறைந்திருக்கிறது. இன்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ. 9,295க்கும், ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனையானது. 3 நாட்களில் சவரனுக்கு சுமார் ரூ.1000 வரை குறைந்திருப்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்த பின், தங்கம் விலை உயரத் தொடங்கியது.

வரலாறு காணாத உச்சம்

தங்கம் விலையை பொறுத்தவரை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.73 ஆயிரம் என்று இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் விலை உயர்ந்து கொண்டே வந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதற்கு அடுத்த நாளான 7 ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. இது தங்கத்தின் விலையில் புதிய உச்சமாக அமைந்தது.

gold price gold

விரைவில் தொடங்கும் திருமண சீசன்

அதற்கு அடுத்த நாளில் இதையும் முறியடித்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. நாள்தோறும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததால், சாமானிய மக்கள் பலரும் சோகம் அடைந்தனர். திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

ரூ.75 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை

இந்த நிலையில் ஆகஸ்ட் 9 முதல் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. ஆகஸ்ட் 9 நிலவரத்தின் படி ஒரு கிராம் தங்கம் ரூ.9,445க்கும், ஒரு சவரன் ரூ.75,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையில் எந்த மாற்றமும் நடக்காமல் இருந்த நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9,375க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனையானது.

3வது நாளாக சரிவு

இதனால் இன்றும் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப இன்று ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.9,295க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.74,360க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ச்சியாக 3வது நாளாக தங்கம் விலை குறைந்திருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்திருக்கிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

11.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+