Gold Rate Today: 4வது நாளாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,360க்கு விற்பனை
சென்னை: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.5 குறைந்த நிலையில், ஒரு கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.ரூ.74,320க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்த பின், இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயரத் தொடங்கியது.

தங்கம் விலையை பொறுத்தவரை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.73 ஆயிரம் என்று இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் விலை உயர்ந்து கொண்டே வந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதற்கு அடுத்த நாளான 7 ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.
அதனைவிடவும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரூ.75 ஆயிரத்து 560க்கு விற்பனையானது. ஆடி மாதத்தில் திருமண சீசன் இல்லையென்றாலும், தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்று மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் பலரும் தங்கம் வாங்கலாமா, வேண்டாமா என்ற யோசனைக்கு செல்லும் வகையில் விலையில் ஏற்றம் இருந்தது.
ஆனால் ஆடிப் பெருக்கு முடிவடைந்த நிலையில், தங்கம் விலை குறையத் தொடங்கியது. ஆவணி மாதம் முழுவதும் திருமண சீசன் என்பதால், பொதுமக்கள் நகைக் கடைகளை நோக்கி செல்ல தொடங்கினர். அதற்கேற்ப தங்கம் விலையும் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.1200 தங்கம் விலை குறைந்திருக்கிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9,375க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் நேற்று தங்கம் விலையில் கிராமிற்கு ரூ.80 குறைந்து ரூ.9,295க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640க்கு குறைந்து ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் 4வது நாளாக இன்றும் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கம் கிராமிற்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.ரூ.74,320க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360












Click it and Unblock the Notifications