Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே ஷாக் தந்த தங்கம்.. சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வரை பெரியளவில் உயராமல் இருந்த தங்கம் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து இருக்கிறது.. வணிகப் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்துள்ளது.

டிரம்ப் வந்ததில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அவரது ரெசிப்ரோக்கல் வரி, சீனா உடனான வர்த்தக மோதல் ஆகியவையே இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. இந்தாண்டு தொடக்கத்தில் சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,950 என்ற ரேஞ்சில் தான் இருந்தது.

Gold Price Gold

தங்கம் விலை

ஆனால், இப்போது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. வெறும் ஆறு மாதங்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2500ஐ தாண்டிவிட்டது. அந்தளவுக்குத் தங்கம் விலை நிற்காமல் தொடர்ந்து பறந்து வருகிறது. இதனால் மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பல முக்கியமான வல்லுநர்கள் தங்கம் விலை குறையும் என்று கணித்திருந்தனர். அதாவது தங்கம் விலை இந்தாண்டு ஏற்கனவே அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிட்டது.. இதனால் தங்கம் விலை குறையும் என்பதே அவர்களின் கணிப்பு தங்கம் விலை 30% வரை குறையலாம் எனப் பலரும் குறிப்பிட்டனர்.

ஏற்ற இறக்கம் இல்லை

அதேபோல சில வாரங்களாகத் தங்கம் விலை பெரியளவில் ஏறவில்லை. குறிப்பாக மத்தியக் கிழக்கில் நிலைமை மிக மோசமாகச் சென்றபோதும் கூட தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்கவில்லை. ஆனால், குறையவும் இல்லை. இதற்கிடையே தங்கம் விலை இப்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. டாலர் மதிப்பு இழப்பும், டிரம்ப்பின் வரி அறிவிப்புகளுமே இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது.

விலை உயருமா!

கடந்த ஜூலை 9ம் தேதி முதல் நான்கு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 9ம் தேதி தங்கம் விலை ரூ.720,000க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை சீராக உயர்ந்தே வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120க்கு விற்பனையானது. நேற்று என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து, ரூ.73,240க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.9155க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

14.07.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.73,240

13.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120

12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ.71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ.71,440

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+