Gold Rate Today: நிம்மதி கொடுத்த தங்கம் விலை! இன்று விலை குறைந்தது! இன்றைய ரேட் எவ்வளவு
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்றே குறைந்திருந்தது. அது இன்று இந்தியச் சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலக சந்தையைப் போலவே இன்று இந்தியாவிலும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 80 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் டிரம்ப் என எளிதாகச் சொல்லலாம். இஷ்டத்திற்கு அவர் கொண்டு வரும் வரிகள் தங்கத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு போய்விட்டது. இந்தாண்டு தொடக்கம் முதல் தங்கம் கிட்டதட்ட 20%க்கு மேல் உயர்ந்துவிட்டது.

தங்கம் விலை
குறுகிய காலத்தில் இந்தளவுக்கு உயர்ந்ததால் தங்கம் விலை குறையும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். பல வல்லுநர்களும் கூட தங்கம் விலை குறைய வாய்ப்பு அதிகம் என்றே சொன்னார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தங்கம் விலை பெரிதாக உயரவில்லை என்ற போதிலும் அது நிலையாகவே இருந்து வந்தது. குறிப்பாக மத்தியக் கிழக்கு மோதல் சமயத்திலும் தங்கம் உயரவில்லை. இதனால் தங்கம் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
உயர்ந்தே வந்தது
ஆனால், அதுவும் நடக்கவில்லை.. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சீராக உயர்ந்தே வருகிறது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 உயர்ந்துள்ளது. ஜூலை 9ம் தேதி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72,000க்கு விற்பனையான நிலையில், இப்போது அது ரூ.73,240க்கு விற்பனையாகிறது. அதேபோல ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.9155க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் தங்கம் விலை நேற்று மிக லேசாக குறைந்தது. அங்கும் சமீபத்திய நாட்களில் தங்கம் விலை உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கத் தங்கள் முதலீட்டைக் கொஞ்சம் விற்றுள்ளனர். இதனால் தங்கம் விலை சற்றே குறைந்திருந்தது. இந்தியச் சந்தையிலும் அது எதிரொலித்தால் தங்கம் விலை இங்கும் இன்று சற்று குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய விலை நிலவரம்
அதற்கேற்பத் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.9145க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, ரூ.125க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
15.07.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.73,240
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!











Click it and Unblock the Notifications