Gold Rate Today: ஆட்டத்தை ஆரம்பிக்கும் தங்கம் விலை.. இன்று மீண்டும் ரேட் எகிறியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கடந்த சில காலமாகவே உயர்ந்து வந்த தங்கம் விலை, திடீரென யூடர்ன் போட்டு சில நாட்களாகக் குறைய ஆரம்பித்தது. ஆபரணத் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் கிராமுக்கு ரூ.60 வரை குறைந்தது. இப்படித் தொடர்ச்சியாகத் தங்கம் விலை குறைந்ததால், இன்றும் விலை குறையும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி, அதன் மீதான மக்களின் ஈர்ப்பு மட்டும் குறையப் போவதே இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒரு பக்கம் தங்கத்தை மக்கள் சேமிப்பாகப் பார்க்கும் அதேநேரம் நமது கலாச்சாரத்திலும் தங்கத்திற்கு முக்கியமான பங்கு இருப்பது இன்னொரு காரணம்.

Gold Price Gold

தங்கம்

நமது நாட்டில் திருமணம் தொடங்கி எல்லா நல்ல நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு முக்கிய இடம் இருக்கிறது எனச் சொன்னால் மிகையாகாது. இதற்கிடையே நமது நாட்டில் இப்போது கல்யாண சீசன் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஆடி மாதத்தைத் தாண்டினால்.. அடுத்து வரும் காலங்களில் வரிசையாகத் திருமணம் உட்பட ஏகப்பட்ட விஷேசங்கள் அடுத்தடுத்து வரும். இதனால் மக்கள் இப்போது முதலே மெல்லத் தங்கம் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வந்ததால் மக்களால் திட்டமிட்டபடி தங்கத்தை வாங்க முடியவில்லை. இதன் காரணமாகவே ஜூன் மாதம் இறக்குமதியும் கூட கணிசமாகக் குறைந்திருந்தது. ஆபரணத் தங்கம் ஏற்கனவே ரூ.9000 தாண்டிவிட்டது. இந்த ஜூலை மாதம் கூட தொடக்கம் முதலே தங்கம் விலை சீராக உயர்ந்தே வந்தது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர்.

யூடர்ன் போட்ட தங்கம் விலை

ஆனால், கடந்த இரு நாட்களாகத் தங்கம் விலை திடீரென யூடர்ன் போட்டு இருக்கிறது. ஆபரணத் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் கிராமுக்கு ரூ.60 வரை குறைந்துள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் தங்கம் விலை குறைவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

இன்றைய விலை

நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72,800க்கு விற்பனையாகும் நிலையில், ஒரு கிராம் ரூ.9100க்கு விற்பனையாகிறது. இதற்கிடையே மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை தொடர்ந்து குறையும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர்..

ஆனால், இரண்டு நாட்கள் குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.72,840க்கு விற்பனையாகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9105க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை

17.07.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.72,840

16.07.2025 (நேற்று) - ஒரு சவரன் ரூ.72,800

15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
14.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
13.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+