Gold Rate Today: நகைக்கடைக்கு கிளம்புங்க.. ரூ.840 குறைந்த தங்கம் விலை.. சவரன் ரூ.73,600க்கு விற்பனை!
சென்னை: தமிழ்நாட்டில் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை நெருங்கி இருக்கும் நிலையில், இன்று குறைந்திருப்பது மக்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ரூ.9,200க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600க்கும் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் வந்த பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது.

உச்சத்தில் தங்கம்
மே மாதம் தொடக்கத்தில் உச்சத்திற்கு சென்ற நிலையில், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. இதன்பின் மே மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. திருமண சீசன் தொடங்கிய போது மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது
ஆனால் தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன. ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமண சீசன் முடிந்துவிட்டாலும், தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையில் எந்தவித குறைவும் இல்லை.
2வது நாளாக குறைந்த தங்கம் விலை
இதனால் தங்கம் விலை குறைய வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.9,305க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 2வது நாளாக மீண்டும் தங்கம் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 105 குறைந்து, ரூ.9,200க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
16.06.2025 - ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025 - ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025 - ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025 - ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025 - ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025 - ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360












Click it and Unblock the Notifications