Gold Rate Today: உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 உயர்வு.. ஒரு சவரன் ரூ.73,880க்கு விற்பனை!
சென்னை: தமிழ்நாட்டில் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.9,235க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.73,880க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வந்த பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது.

உச்சத்தில் தங்கம் விலை
மே மாதம் தொடக்கத்தில் உச்சத்திற்கு சென்ற நிலையில், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத அளவிற்கு உச்சத்தை எட்டியது. ஆனால் மே மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் தங்கம் விலை சரிந்தது. திருமண சீசன் தொடங்கிய போது மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
ஈரான் - இஸ்ரேல் போர்
ஆனால் தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன. ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாமானிய மக்கள் பலரும் சோகம் அடைந்தனர்.
இன்றைய தங்கம் விலை
இந்த வாரத்தை பொறுத்தவரை முதல் 2 நாட்கள் குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்த நிலையில், ரூ.9,210க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலயில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.9,235க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.73,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360












Click it and Unblock the Notifications