Gold Rate Today: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.65,000ஐ நெருங்கியது
சென்னை: டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை, இப்போது தான் கடந்த சில நாட்களாக நிலையாக இருக்கிறது. சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து 8,065 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று மேலும் ரூ.55 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8120க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை இருப்பதால் தங்கம் விலை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு டிரம்ப் குடியேற்றக் கொள்கை, புவிசார் அரசியல், பொருளாதாரம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதனால் இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தே வந்தது. சென்னையில் சில வாரங்களுக்கு முன்பே 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8000ஐ கடந்துவிட்டது.

இந்தச் சூழலில் தான் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் நிலையாக இருந்து வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7950 முதல் ரூ.8050 என்ற ரேஞ்சுக்குள் தொடர்ந்து இருந்து வருகிறது.
அதிகபட்சமாகக் கடந்த பிப்ரவரி 25ம் தேதி ஒரு சவரன் ரூ.64,600க்கு விற்பனையானது. இருப்பினும், அதன் பிறகு பிப்ரவரி26 ஆம் சவரனுக்கு 200 ரூபாயும் பிப்ரவரி 27ஆம் தேதி சவரனுக்கு 320 ரூபாயும் குறைந்தது. பிப்ரவரி மாதம் முழுக்கவே இதுபோல ஏற்ற இறக்கங்களுடனேயே தங்கம் விலை இருந்து வந்தது.
கடந்த மார்ச் 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் மேலும் ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
அதன் பிறகு மார்ச் 4 முதல் நேற்று மார்ச் 12 வரை தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.55 மட்டுமே உயர்ந்தது. கடந்த மார்ச் 11இல் 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ 30 குறைந்து, ரூ 8,020-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், நேற்று அது ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 8,065க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.65,000ஐ நெருங்கியுள்ளது.. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 உயர்ந்து, ரூ.64,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம், ரூ.55 உயர்ந்து, ரூ.8120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
13.03.2025- (இன்று) ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025- ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520












Click it and Unblock the Notifications