Gold Rate Today: இன்று தங்கம் விலை எவ்வளவு? டிரம்ப் வேற புதிய வரிகளை அறிவிக்க ரெடியா இருக்காரே
சென்னை: கடந்த ஒரு வாரமாக நிலையாக இருந்த தங்கம் விலை மீண்டும் சட்டென உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து 8,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்கப்போகும் நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றபோது சில வாரம் குறைந்த தங்கம் விலை அதன் பிறகு அதிகரித்துப் போய்க்கொண்டே இருக்கிறது. அதிலும் அவர் அதிபர் பதவிக்கு வந்த பிறகு போடும் வினோதமான உத்தரவுகளால் தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 22 கேரட் தங்கம் ஒரு கிராம் நிலையாக ரூ.8100ஐ தாண்டியே இருந்து வந்தது.

தங்கம் விலை
இந்தச் சூழலில் தான் தங்கம் விலை கடந்த வாரம் சற்று நிலையாக இருந்தது. கடந்த மார்ச் 21 முதல் மார்ச் 26 வரையிலும் தங்கம் விலை ரூ.8200க்கு கீழாகவே இருந்தது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை மளமளவென உயர்ந்து உச்சத்திற்குப் போய்விட்டது.
அதாவது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை கடந்த மார்ச் 20ம் தேதி ரூ.8310க்கு விற்பனையானது. அடுத்து இரு நாட்களும் தங்கம் விலை தலா ரூ.40 குறைந்தது. மார்ச் 23ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த சூழலில், மார்ச் 24ம் தேதி 15 ரூபாயும் மார்ச் 25ம் தேதி 30 ரூபாயும் தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் (மார்ச் 25) தங்கம் ஒரு கிராம் ரூ.8185க்கு விற்பனையானது. சமீப நாட்களில் தங்கத்தின் குறைந்தபட்ச விலை இதுவாகும்.
கடந்து வந்த பாதை
அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை கடந்த 4 நாட்களாக உயர்ந்தே வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.8195க்கு விற்பனையானது. மார்ச் 27ம் தேதி ரூ.40 உயர்ந்த நிலையில், மார்ச் 28ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.105 உயர்ந்து ரூ.8340க்கு விற்பனையானது.
எப்படி இருக்கும்
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் தங்கம் விலை மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.8360க்கு விற்பனையானது. அதேபோல 24 கேரட் தங்கமும் நேற்றைய தினம் ரூ.9120க்கு விற்பனையானது. டிரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி ஏப்ரல் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் சூழலில் தங்கம் விலை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இன்றைய தினம் மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8360க்கும் ஒரு சவரன் ரூ.66,800க்கும் விற்பனையாகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9120க்கும், வெள்ளி ஒரு கிராம் ரூ.113க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
30.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
29.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
28.03.2025- ஒரு சவரன் ரூ.66,720
27.03.2025- ஒரு சவரன் ரூ.65,880
26.03.2025- ஒரு சவரன் ரூ.66,560
25.03.2025- ஒரு சவரன் ரூ.65,480
24.03.2025- ஒரு சவரன் ரூ.65,720
23.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
22.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
21.03.2025- ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025- ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025- ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025- ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025- ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025- ஒரு சவரன் ரூ.66,400 (பகல்)
14.03.2025- ஒரு சவரன் ரூ.65,840 (காலை)
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400












Click it and Unblock the Notifications