Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.67,000ஐ கடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து உயர்கிறது. நேற்றைய தினம் தங்கம் விலை சென்னையில் 22 கேரட் ரூ.20 உயர்ந்து 8,360 ரூபாய்க்கு விற்பனையானது.. ஒரு பக்கம் டிரம்பின் வரி, மற்றொரு பக்கம் புவிசார் அரசியல் என்று குழப்பங்கள் அதிகரித்து வரும் சூழலில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனையாகிறது

ஏழை மற்றும் மிடில் கிளாஸ் தங்கத்தைத் தான் எப்போதும் முதல் சேமிப்பாகக் கருதுவார்கள். தங்கம் விலை என்பது நீண்ட நாள் நோக்கில் குறையாது என்பதால் மக்கள் தொடர்ச்சியாகத் தங்கத்தை வாங்குவார்கள். ஆனால், கொரோனாவுக்கு பிறகு வாங்கவே முடியாத அளவுக்குத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது

Gold Price Gold

கடந்த சில வாரங்களாகவே ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8100ஐ தாண்டியே இருந்து வருகிறது.. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

தங்கம் விலை

கடந்த மார்ச் மார்ச் 20ம் தேதி தங்கம் விலை ரூ.8310க்கு சென்றது. பிறகுச் சற்று குறைந்த தங்கம் விலை ஒரு கிராம் கடந்த (மார்ச் 25) ரூ.8185க்கு விற்பனையானது. அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை குறையவே இல்லை. கடந்த மார்ச் 26ம் தேதி ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை, அதன் பிறகு மார்ச் 27ம் தேதி 40 ரூபாயும், மார்ச் 28ம் தேதி ரூ.105 உயர்ந்தது. கடந்த மார்ச் 29ம் தேதி தங்கம் விலை மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.8360க்கு விற்பனையானது. அன்றைய தினம் 24 கேரட் தங்கம் ரூ.9120க்கு விற்பனையானது

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. நேற்று மார்ச் 30ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8360, 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9120க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளி ஒரு கிராம் ரூ.113க்கும் விற்பனையாகிறது.

காரணங்கள் என்ன

என்ன தான் ஒரு பக்கம் அமெரிக்க டாலர் மதிப்பு சற்று சரிவடைந்து வந்தாலும் புவிசார் அரசியல் நிலைமை மோசமாகவே இருக்கிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் மீண்டும் தொடங்கிவிட்டது, ரஷ்யா உக்ரைன் போர் இப்போது முடிவது போலத் தெரியவில்லை. போதாக்குறைக்கு இப்போது டிரம்ப் ஈரானுக்கும் மிரட்டல் விடுக்கிறார். இப்படி உலகெங்கும் போர் சுழல் அதிகரித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை வேற அறிவிக்கப் போகிறார். நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 2ம் தேதி முதல் ஒரு நாடு அமெரிக்கா மீது எவ்வளவு வரி வசூலிக்கிறதோ.. அதே அளவு வரியை அமெரிக்காவும் வசூலிக்கப் போகிறது. இது சர்வதேச அளவில் ஒரு மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. இதனாலும் கூட தங்கம் விலை புதிய உச்சத்திற்குப் போக இருக்கிறது.

புதிய உச்சம்

இன்றைய தினம் தங்கம் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.520 உயர்ந்துள்ளது. இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.67,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.8425க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

31.03.2025- ஒரு சவரன் ரூ.67,400
30.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
29.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
28.03.2025- ஒரு சவரன் ரூ.66,720
27.03.2025- ஒரு சவரன் ரூ.65,880
26.03.2025- ஒரு சவரன் ரூ.66,560
25.03.2025- ஒரு சவரன் ரூ.65,480
24.03.2025- ஒரு சவரன் ரூ.65,720
23.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
22.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
21.03.2025- ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025- ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025- ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025- ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025- ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025- ஒரு சவரன் ரூ.66,400 (பகல்)
14.03.2025- ஒரு சவரன் ரூ.65,840 (காலை)
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+