Gold Rate Today: நிலையாக நிற்கும் தங்கம் விலை.. குழப்பத்தில் பொதுமக்கள்! இன்று விலை என்ன பாருங்க?
சென்னை: சர்வதேச அளவில் அடுத்தடுத்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகளால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குழப்புகிறது. திடீரென சில நாள் குறையும் தங்கம் விலை.. அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் தங்கம் விலை இன்னும் குறையுமா? இல்லை அதிகரிக்குமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் இருந்தனர். இதற்கிடையே இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று. சேமிப்பைத் தாண்டி கலாச்சார ரீதியாகவும் தங்கத்திற்கு மிக முக்கியமான ஒரு இடம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஏழை, மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் சேமிப்பில் தங்கத்தை வாங்குவார்கள்.

தங்கம் விலை
திருமணம் தொடங்கி அனைத்து சுப காரியங்களிலும் தங்கத்திற்குத் தவிர்க்கவே முடியாத ஒரு இடம் இருக்கிறது. மேலும், நீண்ட கால நோக்கில் பார்த்தாலும் கூட தங்கம் விலை அதிகரிக்கவே செய்துள்ளது. இதன் காரணமாகவே மக்கள் ஆர்வமாகத் தங்கத்தை வாங்குவார்கள்.
கொரோனா வைரஸ், ரஷ்யா உக்ரைன் மோதல், இஸ்ரேல் ஹமாஸ் போர், டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரி என்று கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர வரிசையாகப் பல காரணங்கள் வந்தன. குறிப்பாகக் கடந்த மாதம் இறுதியில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000ஐ கூட தாண்டியது. இருப்பினும், அதன் பிறகு சற்றே குறைந்தது.
புவிசார் அரசியல்
இதற்கிடையே புவிசார் அரசியல் வேகமாக மாறி வருவதால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம் இறக்கம் என இரண்டும் சேர்ந்தே இருக்கிறது. முதலில் வரி விவகாரத்தில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றினார். அமெரிக்கா சீனா இடையேயான வரி விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இப்போது டிரம்ப் அறிவித்த அனைத்து வரியும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது மிகவும் பாசிட்டிவான சிக்னலாக பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது.
இரு மேஜர் மாற்றம்
அதேநேரம் வியாழக்கிழமை இரு முக்கிய மாற்றங்கள் நடந்தன. ஒன்று அமெரிக்க டாலர் மதிப்பு சற்று சரிந்தது. அதேபோல அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த ஒரு டேட்டா வந்தது. அதில் அமெரிக்காவில் சில்லறை விற்பனை வளர்ச்சி குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டுமே அமெரிக்கப் பொருளாதாரத்திற்குச் சிக்கலைத் தருவதாக இருந்தது. இதுபோல பொருளாதார சிக்கல் ஏற்படும்போது தங்கம் விலை அதிகரிக்கும். இதன் காரணமாகவே இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது.
அதாவது கடந்த மே 14ம் தேதி ரூ.70840ஆக இருந்தது. மே 15ம் தேதி தங்கம் விலை மேலும் குறைந்து சவரனுக்கு ரூ.68,880க்கு விற்கப்படுகிறது. அன்றைய தினம் மேலே கூறப்பட்ட இரு விஷயங்கள் நடந்ததால் வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்கப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது.அதாவது கடந்த மே 14ம் தேதி ரூ.70840ஆக இருந்தது. மே 15ம் தேதி தங்கம் விலை மேலும் குறைந்து சவரனுக்கு ரூ.68,880க்கு விற்கப்படுகிறது. அன்றைய தினம் மேலே கூறப்பட்ட இரு விஷயங்கள் நடந்ததால் வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்கப்பட்டது. இதற்கிடையே நேற்றை போலவே இன்றும் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. வெள்ளிக்கிழமை விலையே தொடர்கிறது
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
18.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (இன்று)
17.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (நேற்று)
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
-
Gold Rate: தமிழ் புத்தாண்டு தினத்தில் ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு? -
தங்கம் வாங்கும்போது பில்லில் இந்த 2 வார்த்தை இருக்கா? இல்லைனா உங்க பணம் காலி.. நகைக்கடை சீக்ரெட் -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications