Gold Rate Today: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. விலை மளமளவென சரிந்தது! இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா
சென்னை: கடந்த வாரம் தங்கம் விலை சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலரும் ஆர்வமாகத் தங்கத்தை வாங்கினார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கம் விலை எங்கு மீண்டும் வரும் காலங்களில் உயரத் தொடங்கிவிடுமோ என்ற சோகத்தில் இருந்தனர். இருப்பினும், இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்கு டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி, அமெரிக்கா சீனா வர்த்தக மோதல், இந்தியா பாகிஸ்தான் பதற்றம் என பல்வேறு காரணங்கள் இருந்தது. சென்னையில் கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9000-ஐ தாண்டியிருந்தது.

தங்கம் விலை
இருப்பினும், இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அமெரிக்கா சீனா வர்த்தக மோதல் முடிவுக்கு வந்தது. இந்தியா பாகிஸ்தான் பதற்றமும் முடிந்தது. இதனால் கடந்த வாரம் தங்கம் விலை கணிசமாகக் குறையத் தொடங்கியது. 10 நாட்களுக்கு முன்பு மே 10ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.72,360ஆக இருந்தது. அடுத்த 5 நாட்கள் அது மெல்லக் குறைந்து மே 15ம் தேதி குறைந்தபட்சமாக ரூ.68,800ஐ எட்டியது.
அமெரிக்காவுக்கு சிக்கல்
ஆனால், அதன் பிறகு சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவிலும் சில முக்கிய பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டது. அதாவது மூடி என்ற பொருளாதார நிறுவனம் அமெரிக்காவை Aaa என்ற நிலையில் இருந்து Aa1 என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இது நமது சிபில் ஸ்கோர் போல.. அமெரிக்காவுக்கான மார்க்கை குறைத்துள்ளனர்.
அமெரிக்க அரசின் கடன் அதிகரித்து வருவதும், அரசுக்கான வருவாய் குறைவும் அதேநேரம் செலவும் அதிகரிக்கிறது. அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையும் அதிகரித்து வரும் சூழலில் மூடி அதன் ரேட்டிங்கை குறைத்துள்ளது. ஏற்கனவே ஃபிட்ச், எஸ் & பி உள்ளிட்ட நிறுவனங்கள் கிரெடிட் ரேட்டிங்கை குறைத்திருந்த நிலையில், இப்போது மூடியும் குறைத்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
இதனால் அமெரிக்க டாலர் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. டாலர் மதிப்பு குறையும் நிலையில், தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. மே 16ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.69,760ஆக இருந்தது. அதன் பிறகு தங்கம் விலை மூன்று நாட்கள் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்கப்பட்டது.
இதற்கிடையே இன்றைய தினம் விலையில் எதிர்பாராத மாற்றம் நடந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.69,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
20.05.2025- ஒரு சவரன் ரூ.69,680 (இன்று)
19.05.2025- ஒரு சவரன் ரூ.70,040 (நேற்று)
18.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360












Click it and Unblock the Notifications