Gold Rate Today: ட்விஸ்ட் கொடுத்த டிரம்ப்.. மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு உயரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக சந்தையில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களாலும் புவிசார் அரசியல் காரணங்களாலும் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. நேற்று வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000ஐ தாண்டியது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. அதேநேரம் தங்கம் விலை வரும் நாட்ககளில் எந்தளவுக்கு உயரும் என்பதிலும் மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் டிரம்ப் அதிபரானது முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இடையில் சில காலம் குறைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. டிரம்ப் இஷ்டத்திற்குப் பிறப்பிக்கும் உத்தரவுகளே இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

Gold Price Gold

காரணம் என்ன!

குறிப்பாக டிரம்ப் தரப்பு சமீபத்தில் தான் இந்தியாவுக்கு எதிராக 50% வரியை விதித்தார். அதுவே இப்போது தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திற்குப் போகத் தொடக்கக் காரணமாக இருக்கிறது. இது இந்தியா அமெரிக்கா உறவையும் வர்த்தகத்தையும் பாதிக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி தங்கம் பக்கம் செல்கிறார்கள்.

மேலும், இப்போது அமெரிக்காவிலும் வேலைவாய்ப்பு டேட்டா சரியாக இல்லை. அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் சரிந்துள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் குறைப்பை மேற்கொள்ளலாம் எனச் சொல்லப்படுகிறது. அப்படி வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை மேலும் உயரும். அதை மனதில் வைத்தே தங்கம் விலையை இப்போதே உயர்த்தி வருகிறார்கள்.

தங்கம் புதிய உச்சம்

கடந்த மாதம் 1ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.73,200க்கு விற்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் இறுதியிலேயே தங்கம் விலை ரூ 76 ஆயிரத்தைத் தாண்டியது. இதற்கிடையே நேற்றைய தினம் செப்டம்பர் 6ம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை ரூ.10,000ஐ தாண்டியது. நேற்று கிராமுக்கு ரூ 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,005-க்கும் விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ. 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 80,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

வரும் நாட்கள்

அதேநேரம் தற்போதைய சூழலை வைத்துப் பார்த்தால் தங்கம் விலை குறைவதற்கான சூழல் எதுவும் இல்லை. ஒரு சர்வதேச புவிசார் அரசியல் மோசமாகவே இருக்கிறது. மற்றொரு பக்கம் அமெரிக்க மத்திய வங்கியும் வட்டியைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தங்கம் விலை மேலும் உயரும் என்றே தெரிகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

07.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920

04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360

03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440

02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

31.08.2025-ஒரு சவரன் ரூ.76,960

30.08.2025-ஒரு சவரன் ரூ.76,960

29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760

28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240

27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+