Gold Rate Today: வாரத்தின் முதல் அதிர்ச்சி.. காலையில் சரிந்த தங்கம் விலை.. மதியம் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகளவில் நடக்கும் புவிசார் மாற்றங்கள், இந்தியா அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,005-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை உயரவில்லை. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை காலை குறைந்த தங்கம் விலை, பிற்பகலில் மாண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மிடில் கிளாஸ் மக்களுமே கூட நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு டிரம்ப் வரிகளும் அமெரிக்காவின் புவிசார் அரசியலுமே பிரதானக் காரணமாக இருக்கிறது. இதுவே தங்கம் விலை புதிய உச்சம் தொட காரணமாக இருக்கிறது.

Gold Price Gold

டிரம்ப் வரி

சமீபத்தில் தான் இந்தியா மீது டிரம்ப் 50% வரி விதித்திருந்தார். அதன் காரணமாகவே தங்கம் விலை உயர ஆரம்பித்தது.. தற்போதைய சூழலில் இந்தியா அமெரிக்கா உறவு சீராவது போல தெரியவில்லை.. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைக் கருதி, அதில் முதலீடு செய்கிறார்கள்.

ரூ.10,000ஐ தாண்டியது

இதன் காரணமாகக் கடந்த பல நாட்களாகத் தங்கம் விலை சீராக உயர்ந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே குறைந்திருந்தது. மற்றபடி தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தே வருகிறது. குறிப்பாகச் சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.80,040ஐ தொட்டது. ஒரு கிராம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.10,000ஐ தாண்டியது.

அதேபோல அமெரிக்காவிலும் பொருளாதாரம் சற்று தடுமாற ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு டேட்டாவும் அதையே காட்டுவதாக இருக்கிறது. இதனால் அடுத்த வாரம் நடைபெறும் அமெரிக்க மத்திய வங்கி மீட்டிங்கில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றே தெரிகிறது. வட்டி விகிதம் குறைக்கப்படும்போது தங்கம் விலை மேலும் உயரும். இதெல்லாம் சேர்ந்தே தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.75120க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தே வந்தது. சனிக்கிழமை செப்டம்பர் 6ம் தேதி சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து, ரூ.80,040க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு கிராம் 10,005 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. இன்று திங்கள்கிழமை காலை தங்கம் விலை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் குறைந்திருந்தது. இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.280 குறைந்து, ரூ.79,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.9970க்கு விற்கப்படுகிறது.

ஆனால், இந்த இன்ப அதிர்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காலையில் சரிந்த தங்கம் விலை, பிற்பகலில் தாறுமாறாக உயர்ந்தது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.80,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.10,060க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

08.09.2025 (இன்று பிற்பகல்)- ஒரு சவரன் ரூ.80,480

08.09.2025 (இன்று காலை)- ஒரு சவரன் ரூ.79,760

07.09.2025 (நேற்று)- ஒரு சவரன் ரூ.80,040

06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920

04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360

03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440

02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

31.08.2025-ஒரு சவரன் ரூ.76,960

30.08.2025-ஒரு சவரன் ரூ.76,960

29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760

28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240

27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+