Gold Rate Today: தங்கம் விலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! இன்று புதிய உச்சம் தொட்டது!
சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாகத் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10,060 வரை போனது. இன்றைய தினமும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.81,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வந்தாலும், கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் புவிசார் அரசியல் மாற்றங்களே இதற்குப் பிரதானக் காரணமாகும். குறிப்பாகப் போர்கள், மோதல்கள், டிரம்ப் வரி ஆகியவை தங்கம் விலையை உச்சத்திற்குக் கொண்டு போய் வைத்துள்ளது.

உச்சத்தில் தங்கம் விலை
இந்தளவுக்குத் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் அதை வாங்கக் கூட முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். தங்கம் விலை கொஞ்சமாவது குறையுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், தற்போது நடக்கும் விஷயங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பது போலத் தெரியவில்லை.
ஏனென்றால் கடந்த வாரம் வெளியான அமெரிக்க வேலைவாய்ப்பு டேட்டாவில் அங்கு நிலைமை மோசமாக இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் நடைபெறும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி குறைப்பு நிச்சயம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்படி வட்டி குறைக்கப்பட்டால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே இப்போதே தங்கம் விலையை உயர்த்தி வருகிறார்கள்.
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
நேற்றைய தினம் தங்கம் விலை ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் இருந்தது. முதலில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் காலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.280 குறைந்து, ரூ.79,760க்கு விற்பனையானது. ஆனால், இந்த மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. பிற்பகலிலேயே விலை தாறுமாறாக உயர்ந்தது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.80,480க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10,060க்கு விற்பனையானது.
இன்றும் உயர்ந்தது
தங்கம் விலை இப்படி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் திருமண சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், தங்கத்தை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்றும் தொடர்ந்து உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து, ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
09.09.2025 (இன்று)- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025 (நேற்று பிற்பகல்)- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025 (நேற்று காலை)- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025 - ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640
31.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
30.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760
28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240
27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120












Click it and Unblock the Notifications