Gold Rate Today: தங்கம் விலை இன்று மளமளவென சரிவு.. சவரனுக்கு ரூ.960 வரை குறைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. அதன்படி ஒரு சவரனுக்கு ரூ.960 வரையும், கிராமுக்கு ரூ.120 வரையும் தங்கம் விலை குறைந்து சென்னையில் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை திடீரென்று குறைந்தது.

Gold price

அதேபோன்ற அறிவிப்பு இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதையும் மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. இதனால் வழக்கம்போல் தினமும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தங்கத்தின் விலை என்பது தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், உலகின் பிற நாடுகளில் இருக்கும் சூழல் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தான் தங்கத்தின் விலை என்பது ஏறி, இறங்கி வருகிறது. அந்த வகையில்
தங்கம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே செல்கிறது.

தைப்பூச தினமான நேற்று சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.640 வரை உயர்ந்து ரூ.64,480க்கு விற்பனையானது. இதன்மூலம் முதல் முதலாக ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது ரூ.64 ஆயிரத்தை கடந்தது.

அதேபோல் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்தது. இதன்மூலம் நேற்று ரூ.7,980க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 8,060க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்தை கடந்து இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

இதனால் இன்று தங்கம் விலை குறையுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பார்ப்பை இன்று தங்கம் விலை பூர்த்தி செய்தது. அதன்படி இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.960 வரை குறைந்து ரூ.63,520க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை என்பது ரூ.120 வரை குறைந்து ரூ.7,940க்கு விற்பனையானது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் இன்று பிரேக் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை தொடர் விலையேற்றத்துக்கு மத்தியிலும் கூட தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டத்தை கொடுத்து உள்ளது. இதனால் இன்று வழக்கத்தை விட அதிகமானவர்கள் நகை கடைக்கு சென்று தங்க ஆபரணங்களை வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

11.02.2025 ஒரு சவரன் ரூ.64,480
10.02.2025 ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+