Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: தங்கம் விலை இன்று: அட்சய திருதியை நாளில் நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமானோர் தங்க நகைகளை வாங்க விரும்பி நகைக் கடைகளில் குவிந்து வருகின்றனர். தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வரும் நிலையில், அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை மாற்றம் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றி சவரன் ரூ.71,840க்கு விற்பனை ஆகிறது.

ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க வர்த்தகப் போர், நாடுகளுக்கு இடையேயான பதற்றச் சூழல் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

Gold price Gold

தங்கம் விலை உயர்வு

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். 2025 ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 68,080-க்கு விற்பனை ஆனது.

தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,200 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் விலை ரூ 74,320-க்கு விற்பனை ஆனது. அதிரடியாக உயர்ந்தது போல அடுத்த நாளே (ஏப்ரல் 23) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையானது.

இந்த வாரத்தில் தங்கம் விலை

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் அடுத்த 4 நாட்களுக்கு தங்கம் விலையில் மாற்றமின்றி இருந்து வந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ. 72,120க்கே விற்பனை செய்யப்பட்டது. 28 ஆம் தேதி திங்கட்கிழமை மார்க்கெட் திறந்ததும் தங்கம் விலை மேலும் சரிந்தது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று செவ்வாக்கிழமை ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று அட்சய திருதியை

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் தங்கம் விற்பனை இன்று அதிகமாக நடக்கும். இதனால் வழக்கமாக அட்சய திருதியை நாளில் தங்கம் விலை அதிகரிக்கும்.

இந்நிலையில், அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றி சவரன் ரூ.71,840க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 8,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 1 முதல் தங்கம் விலை நிலவரம்

30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840 (மாற்றம் இல்லை)

29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
19.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
18.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
17.04.2025- ஒரு சவரன் ரூ.71,360
16.04.2025- ஒரு சவரன் ரூ.70,520
15.04.2025- ஒரு சவரன் ரூ.69,760
14.04.2025- ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
12.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300 (காலை)
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+