Gold Rate Today: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை கடந்தது.. ஷாக்
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) சவரனுக்கு ரூ. 760 வரை உயர்ந்தது. இதனால் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.75,040க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 அதிகரித்து ரூ.9,380க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடைந்து வருகிறது. தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றால் உலக பொருளாதாரத்தில் நிச்சயத்தன்மை நிலவி வருகிறது.

இதனால் பலரும் தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் தங்கத்துக்கான மவுசு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து விலையேறி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1ம் தேதி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையானது. அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ. 74,560- க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று மீண்டும் தங்கம் விலை உச்சம் தொட்டுள்ளது.
இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.760 வரை உயர்ந்தது. இதனால் இன்று காலை 9.30 மணி முதல் ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை கடந்து ரூ.75,040க்கு விற்பனையாகி வருகிறது.ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.9,380க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை சமீபத்தில் குறைந்து வந்த நிலையில் இப்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
23.07.2025 ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
14.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
13.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160












Click it and Unblock the Notifications