Gold Rate Today: நகைப் பிரியர்களுக்கு குஷி.. குறைந்தது தங்கம் விலை! ஒரு கிராம் ரூ.9,000க்கு விற்பனை!
சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72,000க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தங்கம் விலை நிலவரம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.
உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது.
நேற்றைய விலை
நேற்று முன்தினம் (ஜூலை 7) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,010-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை அதிகரித்தது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் இன்றைய விலை
இந்நிலையில், இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72,000க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சற்று குறைந்துள்ளது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ.71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ.71,440












Click it and Unblock the Notifications