Gold Rate Today: மார்க்கெட் திறந்ததுமே நகை பிரியர்களுக்கு காத்திருந்த செம நியூஸ்! தங்கம் விலை சரிவு!
சென்னை: தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூபாய் 1200 குறைந்திருந்த நிலையில் இன்று கூடுமா? அல்லது குறையுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று திடீரென சரிவைச் சந்தித்தது.
தங்கம் விலை நிலவரம்
தமிழகத்தில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஜூன் மாதம் தொடங்கி 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்தது.
ஒரே நாளில் 1,200 ரூபாய் விலை சரிந்தது
ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று முன்தினம் ஜூன் 7 ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை - நேற்று
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் முந்தைய நாளின் விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, நேற்று (ஜூன் 9) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8980க்கும், ஒரு சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7385க்கும், ஒரு சவரன் ரூ.59,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 117க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,17,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், திங்கட்கிழமையான இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் மார்க்கெட் திறந்ததும் இன்றைய தங்கம் விலை நிலவரம் வெளியாகியுள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.71,640க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூபாய் 25 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.8,955க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) கடந்த வாரம் 3,375 டாலராக இருந்தது. இது தற்போது 3,310 டாலராக குறைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்துள்ளது. வரும் வாரத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருக்கும் என சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறி இருந்தார்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை
09.06.2025 - ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160












Click it and Unblock the Notifications