Gold Rate Today: ஒரே நாளில் இரு முறை உயர்ந்த தங்கம் விலை.. விண்ணை முட்டும் விலை! புதிய உச்சம் தொட்டது!
சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்து, 65 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை, பிற்பகலில் மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. இப்படி ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்து தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை ஒரு சவரன் 66 ஆயிரத்தைக் கடந்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, தங்கம் விலை அவ்வப்போது மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம்.

இந்த ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.64,480 என்றும், 20 ஆம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.
தங்கம் விலை நிலவரம்
அதன் பிறகு, ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64,600 ஆக உயர்ந்தது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது.
பிப்ரவரி 28 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை மேலும் ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 1 ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூபாய் 160 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏற்ற இறக்கம்
மார்ச் 4 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 5 சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,520க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,065, ஒரு சவரன் ரூ.64,520 என விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.55 என சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது.
இன்று தங்கம் விலை கடும் உயர்வு
இன்று காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை, பிற்பகலில் மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. இப்படி ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்து தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை ஒரு சவரன் 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1440 உயர்ந்து, ரூ.66,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.180 உயர்ந்து, ரூ.8300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
14.03.2025- (இன்று பிற்பகல்) ஒரு சவரன் ரூ.66,400
14.03.2025- (இன்று காலை) ஒரு சவரன் ரூ.65,840
13.03.2025- (நேற்று) ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 - ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025- ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520












Click it and Unblock the Notifications