Gold Rate Today: 2 நாளில் ரூ.1000 அதிகம்.. மொத்தமா சேர்த்து வச்சு மீண்டும் எகிறிய தங்கம் விலை!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த சூழலில் நேற்று ஒரேயடியாக ரூ.560 அதிகரித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, தங்கம் விலை மாறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே விர்ரென அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம் விலை. ஜனவரி 31 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.61 ஆயிரத்தை தொட்டது.

தங்கம் விலை
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ.62 ஆயிரத்தைக் கடந்தது. இப்படியாக நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டு வந்தது நகைப் பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் விலை ரூ.64,480 ஆகவும், பிப்ரவரி 20 ஆம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது.
அதன் பின்னர் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25 ஆம் தேதி மீண்டும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. ரூ.64,600 ஆக உயர்ந்தது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது. கடந்த 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது.
சென்னையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது. 24 காரட் தங்கம் விலை ரூ.69,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை தொடர் சரிவு
இதையடுத்து, பிப்ரவரி 28 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 1 ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூபாய் 160 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ. 7940க்கு விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும், மார்ச் 3 ஆம் தேதி திங்கட்கிழமையும் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, 5 நாட்களில் மட்டும் ரூ.1080 அளவுக்கு குறைந்தது.
நேற்று மீண்டும் விலை உயர்ந்த தங்கம்
இதனால் தொடர்ந்து சரிவைச் சந்திக்குமா அல்லது தங்கம் விலை உயருமா? என்பது நகைப் பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் 5) தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இன்று தங்கம் விலை மேலும் உயருமா? அல்லது சரியுமா என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து 8,065க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
05.03.2025 ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025 ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025 ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025 ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025 ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520
19.02.2025- ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025- ஒரு சவரன் ரூ.63,120












Click it and Unblock the Notifications