Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதன்மூலம் மீண்டும் சென்னையில் 64 ஆயிரத்தை கடந்துள்ளது ஒரு சவரன் ஆபரண தங்கம். அதாவது, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை திடீரென குறைந்தது. அதேபோன்ற அறிவிப்பு இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதையும் மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடாத நிலையில் வழக்கம்போல் தினமும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

Gold price

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது தங்கம் விலை. கடந்த ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறையத் தொடங்கியுள்ள அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது. கடன் பத்திரங்களை விற்று, அவற்றை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதன் மூலம் நேற்று ஒரு சவரன் ரூ.63,760க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு சவரன் 64,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 108க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையால் சர்வதேச வர்த்தக சூழல் போன்றவை தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை

18.02.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025 ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025 - ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (மத்திய பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (மத்திய பட்ஜெட்டுக்கு முன்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+