Gold Rate Today: ஏறிய வேகத்தில் ‘சர்ரென’ சரிந்த தங்கம் விலை.. சென்னையில் இன்று என்ன ரேட்?
சென்னை: உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற சூழல் காரணமாக தங்கம் விலை தினசரி ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில் ஏறிய வேகத்தில் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, அன்றாட பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமையும் தங்கம் விலை குறைந்திருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.13,150க்கு விற்பனை செய்யப்பட்டது. புதன்கிழமையான நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. ஒரு சவரன் ரூபாய் 240 அதிகரித்து ரூ.1,05,440க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.13,180-க்கும் விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 குறைந்து, ரூ.1,05,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையாகிறது. நேற்று எவ்வளவு ஏறியதோ அதே அளவு இன்று தங்கம் விலை சரிந்துள்ளது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்கள் நிலவரம்
16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440
14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200
13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600
12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400
11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400
10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800
9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560
8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600
7-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,200
6-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,480
5-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600
4-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600












Click it and Unblock the Notifications