Gold Rate Today: மீண்டும் ஏற்றத்தை நோக்கி தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. சென்னையில் இன்று என்ன ரேட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூபாய் 1,05,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

gold rate silver gold

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 13,350 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 1,06,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சனிக்கிழமை (ஜூலை 11) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

திங்கட்கிழமையும் தங்கம் விலை குறைந்திருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமையான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.13,150க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை தங்கம் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு தங்க நகை பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 30 சரிந்து ரூ.13,180க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,05,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் இன்று ரூபாய் 5 அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களில்

15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440

14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600

12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800

9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560

8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600

7-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,200

6-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,480

5-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600

4-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+