Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: தீபாவளி நாளில் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது.. இன்று சென்னையில் என்ன ரேட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில தினங்களாக புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் சனிக்கிழமை அன்று அதிரடி சரிவைச் சந்தித்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. இந்நிலையில் தீபாவளி நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 640 குறைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை இந்து மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு "தந்தேராஸ்" எனப்படும் நாள் வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடன் அனுசரிக்கப்படும் இந்த நாள், செல்வத்தையும் செழிப்பையும் வரவேற்கும் சுபநாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாக செல்வம் பெருகும் அடையாளமாக நம்பப்படுகிறது.

Gold gold price Chennai

தங்கம் விலை சரசர உயர்வு

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே இருக்கிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது.

அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக உயர்ந்து, சவரன் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம், சனிக்கிழமை (அக்டோபர் 18, 2025) அதிரடியாக இறங்கியது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.11,950-ஆகவும், சவரனுக்கு (8 கிராம்) ரூ.2,000 இறங்கி ரூ.95,600-ஆகவும் விற்பனை ஆனது. ஆனால், அன்று மாலையே சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்தது.

சனிக்கிழமை சரிந்த தங்கம் விலை

இந்த அக்டோபர் மாத தொடக்கம் முதல் தங்க விலை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வந்தது. அக்டோபர் 8-ஆம் தேதி சவரன் ரூ.91,000-ஐ தாண்டியது. தொடர்ந்து உயர்ந்து, வியாழக்கிழமை கிராம் ரூ.11,860 (சவரன் ரூ.94,880), வெள்ளிக்கிழமை கிராம் ரூ.11,900 (சவரன் ரூ.95,200) ஆக இருந்தது. இந்த ஏற்றத்தால் பொதுமக்கள் கவலையடைந்தனர்.

இந்நிலையில் தான் சனிக்கிழமை சற்று குறைந்தது. அக்டோபர் 19-ஆம் தேதியான நேற்ரு தங்கம் விலை ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 96,000-க்கும் ஒரு கிராம் ரூ 12,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட. அதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 190-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,90,000-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை இன்று

இந்நிலையில், தீபாவளி நாளான இன்று தங்கம் விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக எகிறி வந்த நிலையில், அதற்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர் விழுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 640 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 80 குறைந்து 11,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 95,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ 190-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,90,000-க்கும் விற்பனை ஆகிறது.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை

19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360

19.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000

18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000 (மாலை)

18.10.2025 - ஒரு சவரன் ரூ.95,600 (காலை)

17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600

16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200

15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880

14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600

13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)

13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)

12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000

11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)

11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)

07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)

05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+