Gold rate today: சென்னையில் இன்று மேலும் குறைந்த தங்கம் விலை.. சர்வதேச சந்தையில் தொடர் சரிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே ஆபரண தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

gold price gold

தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் நகை விலை ஏறினாலும் நகை கடைகளில் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை ஏறுமா இறங்குமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்சைய திருதியையை முன்னிட்டு நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியதுடன் விற்பனையும் அமோகமாக இருந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 கேரட் ஆபரண தங்கம் கிராம், 14,250 ரூபாய்க்கும், சவரன், 1,14,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.

நேற்றைய (ஏப்ரல் 23) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,447ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.123,576 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை ஏறுமா? இறங்குமா என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 32 டாலர் குறைந்து தற்போது 4,701 டாலராக விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி ஒரு அவுன்ஸ் 3 டாலர் சரிந்து 75 டாலராக உள்ளது.

இந்த வாரம் முழுவதும் சர்வதேச அளவில் விலை நிலவரம் மந்தமாகவே உள்ளது. இதன் தாக்கமாக, உள்ளூர் மார்க்கெட்டிலும் நேற்று சவரனுக்கு ரூ.720 குறைந்த நிலையில், இன்று மேலும் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

24.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800

23.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,280
22.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,000
21.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560

14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000

08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+