அமெரிக்கா குண்டு போட்டது ஈரான் மேல இல்ல.. தங்கத்து மேல! மார்க்கெட் எப்படி அதிர போகுதுனு பாருங்க!
நியூயார்க்: அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வான்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் மீண்டும் உயர்வு கண்டுள்ளது. பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக தங்கத்தை நாடும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலேயே இந்த ஏற்றம் ஏற்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
எரிசக்தி உள்ளிட்ட தேவைகளுக்காக பெற்ற யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுத தயாரிப்புக்கு ஈரான் பயன்படுத்துவதாக தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு இருப்பதாக கூறி திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின.
இதில், பள்ளி உள்ளிட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கோர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்கா ஈரான் போர்
போர் சூழல் இப்படி இருக்க தங்கத்தின் விலை திடீரென சரிந்தது. போர் உள்ளிட்ட அவற்றின் போது தங்கத்தின் விலை வழக்கமாக அதிகரிக்கும். ஆனால் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சரிந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்வை நோக்கி தங்கத்தின் விலை பயணித்து வருகிறது. குறிப்பாக வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர் சந்தை நிபுணர்கள். புதன்கிழமை வர்த்தகத்தில் ஸ்பாட் தங்கம் 1.6% உயர்ந்து அவுன்ஸுக்கு 5,168.69 அமெரிக்க டாலராக உயர்ந்தது.
தங்கம் விலை உயர்வு
ஏப்ரல் மாத விநியோகத்திற்கான அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸும் 1.1% உயர்ந்து 5,178.40 டாலராக நிலை கொண்டது. இதற்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை, வலுவான அமெரிக்க டாலர் மற்றும் வட்டி விகிதக் குறைப்பில் தாமதம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக தங்கம் 4% க்கும் மேல் சரிந்து, பிப்ரவரி 20க்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்திருந்தது. ஆனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததும் நிலைமைகள் மாறின. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் கப்பல்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்
எண்ணெய் விலை ஏற்றம்
வளைகுடா பகுதியில் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், கத்தார் முதல் ஈராக் வரை எரிசக்தி உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்தன. எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக பணவீக்க அச்சம் மீண்டும் மேலெழுந்துள்ளது. இதனால் உலக பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்த சூழலில் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான முதலீடுகளான தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை நாடுகின்றனர்.
புவியியல் பதற்றம்
Tastylive நிறுவனத்தின் உலகளாவிய மேக்ரோ ஆய்வு பிரிவு தலைவர் இல்யா ஸ்பிவாக் கூறுகையில், "டாலர் மற்றும் பத்திர வருவாய்கள் எவ்வாறு நகர்ந்தாலும், கடந்த ஆண்டிலிருந்து தங்கம் தனித்த பாதையில் சென்று வருகிறது. அதனால் இந்த உயர்வும் ஆச்சரியப்படத் தேவையில்லை" என்றார். OCBC வங்கியின் மூலதன சந்தை நிபுணர் கிறிஸ்டோபர் வோங் கூறுகையில், "ஈரானைச் சுற்றியுள்ள புவியியல் பதற்றம் எண்ணெய் விலையை உயர்த்தி, பணவீக்க அச்சத்தை அதிகரித்துள்ளது. இது பணவியல் தளர்வை சிக்கலாக்குகிறது" என்றார். இருப்பினும் தங்கத்திற்கான அடிப்படை காரணிகள் புவியியல் அசாதாரண நிலை, கொள்கை தெளிவின்மை, முதலீட்டு பன்முகப்படுத்தல் தேவைகள் இன்னும் மாறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க மத்திய வங்கி
இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கி அடுத்த இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் (மார்ச் 18) வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கலாம் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். CME Group FedWatch கருவியின் தரவுகளும் இதையே சுட்டிக்காட்டுகின்றன. தங்கத்துடன் சேர்த்து மற்ற விலையுயர்ந்த உலோகங்களும் உயர்வை கண்டுள்ளன. ஸ்பாட் வெள்ளி 3.5% உயர்ந்து அவுன்ஸுக்கு 84.92 டாலராக உயர்ந்தது. முந்தைய நாளில் 8% க்கும் மேல் சரிந்திருந்த வெள்ளி இப்போது மீள்ச்சி கண்டுள்ளது. பிளாட்டினம் 2.7% உயர்ந்து 2,139.56 டாலராகவும், பலேடியம் 1.6% உயர்ந்து 1,673.87 டாலராகவும் வர்த்தகமானது.
மத்திய கிழக்கில் பதற்றம்
மொத்தத்தில், மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றம் உலகளாவிய நிதிச் சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பங்கு சந்தை சரிவும், எண்ணெய் விலை உயர்வும், பணவீக்க அச்சமும் இணைந்து தங்கத்துக்கு ஆதரவான சூழலை உருவாக்கியுள்ளன. நிலைமை மேலும் மோசமடைந்தால் தங்கம் இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக சந்தை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
-
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங்












Click it and Unblock the Notifications